tet books

time


follow me on fb

Monday, April 23, 2012

கொள்ளையடிக்கும் தனியார் பயிற்சி வகுப்புகள்( coaching class)...

இன்னும் 2 மாதங்கள் முழுமையாக ஆகவில்லை ஆசிரியர் தகுதித் தேர்வுகள் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டு அதற்க்குள் தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களையும் கல்வியியல் கல்லூரிகளையும் மிஞ்சிடும் விதமாக நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காலான்களாக தனியார் பயிற்சி வகுப்புகளின் எண்ணிக்கை வளர்ந்து வருகிறது...

எனக்கு தினமும் எவர்ஆன் என்ற ஆன்லைன் பயிற்சி நிறுவனம் மூலம் குறுஞ்செய்தி வேறு...

 என்னதான் கற்பிப்பாங்க அங்க?

மொத்த பாடமும் நமது 1-8 ஆம் வகுப்பு பாடபுத்தகத்திற்குள் அடங்கிவிட்ட நிலையில் என்னதான் கற்பிப்பார்கள் அங்கு?

என்னவோ M.Phil , P.hd க்கு பயிற்சி பெறுவது போலவும்... I.A.S அதிகாரிகளுக்கு பயிற்சி பெறுவது போலவும் பயிற்சி நிறுவனங்களின் இத்தகைய செயற்பாட்டினை பார்க்கும் போது வேடிக்கையாகத்தான் உள்ளது.

இவற்றிற்கான கட்டணங்களை கேட்கும் போது அய்யோ என்று ஆகிவிடுகிறது... குறைந்த பட்டச கட்டணமே 3500 ருபாயாம் அய்யோ...

என்னவோ TNPSC எழுதுவதற்கு பயிற்சி பெறுவது போல் மாய்ந்து மாய்ந்து பயிற்சி வகுப்பில் சேர்ந்து படிப்பது பயனளிக்குமா?


அல்லது உண்மையான ஆசிரியராக பாடபுத்தகங்களை படித்துணரந்து அவற்றினை எவ்வாறு மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும் என்று அனுபவம் பெற்றவர்களுக்கு இது பயனளிக்குமா என்பதனை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

மேலும் வேலைவாய்ப்பு பயிற்சி அலுவலகம் மூலம் அனைத்து மாவட்ட தலை நகரங்களிலும் 45 நாட்கள் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தபடுவதாக வெளியாகி உள்ள தகவல் புதுமையானது.

என்ன செய்வது 16,000 பணிகளுக்கு 8 லட்சம் போட்டியாளர்கள் என்றால் போட்டி கடுமையாகத்தான் இருக்கும்.

தேர்வு தேதி ஒரு மாதகாலம் வரை தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகவும் ... B.Ed தேர்வு மே 24 நடைபெறும் என்றும் வாய்வழி செய்திகள் உளவி வருகின்றன...


என்னமோ... 150 மதிப்பெண்ணுக்கு 149 மதிப்பெண் எடுத்தால் கூட அது பணி பெறுவதனை பாதிக்கும் என்பதுதான் நிதர்சனமான உண்மையாக இருக்க போகிறது... ஏனெனில் 8 லட்சம் பேரில் 16 ஆயிரம் பேராவது சதமடிக்கும் (முழு மதிப்பெண் எடுக்கும்) ஆசிரியர்கள் இருக்க மாட்டார்களா என்ன??? ஏன் என்றால் நாமெல்லாம் ஆசிரியர்கள் அன்றோ...


தங்களின் கருத்துகளையும்... தங்களுக்கு தெரிந்த ஆசிரியர் தகுதித்தேர்விற்கான 1 மதிப்பெண் குறிப்புகளையும் jagan.nathan801@gmail.com என்ற எனது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும் அவற்றினை இந்த வலைப்பூவில் பதிவேற்றம் செய்கிறேன் அவை நம்மை போன்ற நான்கு பேருக்கு உதவும் அல்லவா???

வாழ்வோம் வாழ வைப்போம்... நல்லதை நினைப்போம் நல்லதை பெறுவோம்...

psychology q.p 

0 தங்களின் கருத்து பதிவிற்கு இங்கே சொடுக்கவும்...:

Post a Comment

தங்களின் கருத்துக்கள் வரவேற்க படுகின்றன

other links