tet books

time


follow me on fb

Monday, December 31, 2012

TNPSC - 2013 வருட முழுமைக்கும் தெளிவான ஒரு தேர்வுநாள் அறிவிப்பு வெளியிடப்படும்.

TNPSC டி.என்.பி.எஸ்.சி. மூலமாக 2013–ம் ஆண்டு எந்தெந்த அரசு பணி இடங்களுக்கு என்னென்ன போட்டித்தேர்வுகள் நடத்தப்படும்? என்ற கால அட்டவணை ஜனவரி மாத இறுதியில் வெளியிடப்படுகிறது. இதன்மூலம், அரசு பணியில் சேர விரும்புவோர் தங்களை தேர்வுக்கு தயார்படுத்திக்கொள்ள முடியும்.

அரசு வேலைக்கு தேர்வு

தமிழ்நாட்டில் பல்வேறு துறைகளுக்கு தேவைப்படும் எழுத்தர்கள், தட்டச்சர்கள், சுருக்கெழுத்தர்கள், சார்நிலை பணியாளர்கள், குரூப்–ஏ அதிகாரிகள் போன்றோர் தமிழ்நாடு அரசு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) மூலமாக தேர்வு செய்யப்படுகிறார்கள். இதற்காக டி.என்.பி.எஸ்.சி. அவ்வப்போது அறிவிப்பு வெளியிட்டு போட்டித்தேர்வுகளை நடத்தி தகுதியான நபர்களை தேர்வு செய்கிறது.

போட்டித்தேர்வுகள் குரூப்–1, குரூப்–2, குரூப்–4 என்று பல்வேறு நிலைகளில் நடத்தப்படுகிறது. எழுத்தர்களும், தட்டச்சர்களும், கிராம நிர்வாக அதிகாரிகளும் குரூப்–4 தேர்வு மூலமாகவும், தலைமைச் செயலக உதவி பிரிவு அதிகாரிகள், நகராட்சி கமிஷனர்கள், சார்–பதிவாளர்கள், உதவி தொழிலாளர் ஆய்வாளர்கள், பேரூராட்சி நிர்வாக அதிகாரிகள், சிறைத்துறை நன்னடத்தை அதிகாரிகள், இளநிலை வேலைவாய்ப்பு அதிகாரிகள், வருவாய் உதவியாளர்கள் போன்றோர் குரூப்–2 தேர்வு மூலமாக நேரடியாக தேர்வு செய்யப்படுகிறார்கள்.

தேர்வு காலஅட்டவணை

இதேபோன்று, துணை கலெக்டர், போலீஸ் டி.எஸ்.பி. ஊராட்சி உதவி இயக்குனர், வணிகவரி உதவி கமிஷனர், மாவட்ட பதிவாளர், கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர், மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி கோட்ட தீயணைப்பு அதிகாரி ஆகிய உயர் பதவிகள் குரூப்–1 தேர்வு மூலமாகவும் நேரடியாக நிரப்பப்படுகின்றன.எந்த தேர்வுக்கு எப்போது அறிவிப்பு வரும்? எப்போது தேர்வு நடத்தப்படும்? தேர்வு முடிவு எப்போது வரும்? என்பன போன்ற விவரங்கள் முன்கூட்டியே தெரியாது. டி.என்.பி.எஸ்.சி. தலைவராக ஆர்.நட்ராஜும், செயலாளராக டி.உதயச்சந்திரனும் (தற்போது வேறு பதவியில் உள்ளார்) பொறுப்பேற்ற பின்னர் ஓராண்டில் என்னென்ன தேர்வுகள் நடத்தப்படும்? அதற்கான அறிவிப்பு எப்போது வெளியாகும்? எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு எப்போது? தேர்வு முடிவு எப்போது வெளியாகும்? ஆகிய விவரங்களுடன் வருடாந்திர தேர்வு கால அட்டவணையை (ஆனுவல் பிளானர்) வெளியிடும் முறையை அறிமுகப்படுத்தினார்கள்.

ஜனவரி இறுதியில் வெளியீடு

அனைவரும் தெரிந்துகொள்ளும் வண்ணம் டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் பகிரங்கமாக வெளியிடப்பட்டது. இதன்மூலம், அரசு பணியில் சேர விரும்புவோர் தங்களை முன்கூட்டியே குறிப்பிட்ட தேர்வுக்கு தயார்படுத்திக்கொள்ள முடிந்தது. காலவரையுடன் தேர்வு முடிவு தேதி, நேர்முகத்தேர்வு, இறுதி முடிவு ஆகியவை வெளிப்படையாக அறிவிக்கப்பட்டதால் போட்டித்தேர்வுக்கு படித்து வந்த மாணவ–மாணவிகள் உற்சாகத்தோடும், முழுமூச்சோடும் படிக்கும் நிலை உருவானது.இந்த நிலையில், 2013–ம் ஆண்டுக்கான தேர்வு காலஅட்டவணை தயாரிக்கும் பணி முடிவடையும் தருவாயில் இருக்கிறது. காலி இடங்கள் பற்றிய பட்டியல் 75 சதவீதம் பெறப்பட்டுவிட்டன. இன்னும் ஒருசில துறைகளில் இருந்து குறிப்பிட்ட சில பதவிகளுக்கான காலி இடங்களின் பட்டியல் வரவேண்டியுள்ளது. அதுவும் கிடைக்கப்பெற்றதும் 2013–ம் ஆண்டுக்கான காலஅட்டவணை இறுதி செய்யப்பட்டு ஜனவரி மாத இறுதியில் அல்லது பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் வெளியிடப்படும்

10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள் வெளியீடு

மார்ச் 1 - மார்ச் 27 வரை 12 ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வு

மார்ச் 27 முதல் ஏப்ரல் 14 வரை 10 ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வு

நடைபெற உள்ளது. 

 

 

http://www.icq.com/img/friendship/static/card_16961_rs.swf 

DATE
SUBJECT’S
27.03.2013
Tamil Paper 1
28.03.2013
Tamil Paper 2

01.04.2013
English Paper 1

02.04.2013
English Paper 2
05.04.2013
Maths
08.04.2013
Science

12.04.2013
Social Science

Thursday, December 27, 2012

முதுகலை ஆசிரியர் பணி நியமன கலந்தாய்வு டிசம்பர் 31 - பணிநியமன ஆணை பெற்றவர்கள் அனைவரும் சனவரி 2 ல் பள்ளிகளில் பணியமரலாம்.


 முதுகலை ஆசிரியர்களுக்கு நியமன ஆணை வழங்குவதற்கான கலந்தாய்வு 31-12-2012 திங்கட்கிழமை அன்று காலை 10.30 மணிக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் நடைபெற உள்ளது. - அதற்கான  முக்கிய குறிப்புக்கள்: 



* 2011-12ம் கல்வியாண்டிற்கு தேர்வு வாரியத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் முதுகலை ஆசிரியர்களுக்கு நியமன ஆணை வழங்குவதற்கான கலந்தாய்வு 31-12-2012 திங்கட்கிழமை அன்று காலை 10.30 மணிக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் நடைபெற உள்ளது.

இவர்கள் சனவரி 2 ஆம் தேதியே பள்ளிகளில் சென்று பணியமரலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


* கீழ்க்குறிப்பிட்டுள்ள முன்னுரிமை அடிப்படையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ளகாலிப்பணியிடங்களுக்கு அந்தந்த மாவட்டங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கான கலந்தாய்வு முதலிலும், இதன்பின்னர் இந்த கலந்தாய்வில் சொந்த மாவட்டங்களில் போதுமான காலிப்பணியிடங்கள் இல்லாததால் பணியிடம் கிடைக்கப் பெறாதவர்களும் மற்றும் வேறு மாவட்டங்களில் பணிபுரிய விருப்பமுள்ளவர்களுக்கான கலந்தாய்வும் அன்றே தொடர்ந்து அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் நடைபெறும்.
முன்னுரிமை1) கண்பார்வையற்றவர்கள், உடல் ஊனமுற்றவர்கள்
2) பெண்கள்
3) இதர நபர்கள்
* தங்கள் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்டவர்கள் அனைவரும் அவர்களுடைய ஆசிரியர் தேர்வுவாரிய தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு, கல்விச் சான்றிதழ் மற்றும் இதர சான்றிதழ்களுடன்கலந்தாய்வில் தவறாமல் கலந்துகொள்வதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
* ஒவ்வொரு பாடத்திற்கும் தனித்தனி கணினியை பயன்படுத்தி ஒரே நேரத்தில் அனைத்து பாடங்களுக்கும் கலந்தாய்வு நடைபெறும்.
* நியமன ஆணை பெறும் ஆசிரியர்கள் அனைவரும் 02.01.2013 அன்று பணியில் சேர வேண்டும்


பழைய செய்தி

புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள முதுகலை ஆசிரியர்களுக்கான பணி நியமனகலந்தாய்வு வரும், ஜனவரி 10ம் தேதிக்குள், நடத்தப்படும் என கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்காக தகுதியான தேர்வர்களைப் பற்றிய விவரங்களை, கல்வித்துறைக்கு அனுப்பும் பணியை, டி.ஆர்.பி., ஆரம்பித்துள்ளது.
சமீபத்தில் தேர்வு செய்யப்பட்ட, 2,308 முதுகலை ஆசிரியர்களின் சான்றிதழ்கள், மீண்டும் ஒருமுறை சரிபார்க்கும் பணி நடந்து வருகிறது. 24ம் தேதி நிலவரப்படி, தகுதியற்ற, 18 பேர், தேர்வுப் பட்டியலில் இடம்பெற்றிருப்பதை, டி.ஆர்.பி., வட்டாரங்கள் உறுதிப்படுத்தின. இவர்கள் அனைவரும், தேர்வுப் பட்டியலில் இருந்து, நீக்கப்பட்டுள்ளனர். 
தேர்வு செய்யப்பட்ட 2,308 பேரின் சான்றிதழ்களும் சரிபார்த்த பின், மொத்தம் எத்தனை பேர், தகுதியற்றவர்கள் என்ற விவரம் தெரியவரும். இதற்கிடையே, தகுதியான தேர்வர்களைப் பற்றிய விவரங்களை, கல்வித்துறைக்கு அனுப்பும் பணியை, டி.ஆர்.பி., ஆரம்பித்துள்ளது. 
அனைவரது விவரங்களும், கல்வித்துறைக்கு வந்துசேர, மேலும் ஓரிரு நாட்கள் பிடிக்கும் எனவும், அதன்பின், ஜன.,10க்குள், "ஆன்-லைன்" கலந்தாய்வு வழியில், பணி நியமனம் செய்ய, நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
நன்றி... S.Murugavel M.sc.,B.Ed

Group 2 Re-exam Results Published

Tuesday, December 25, 2012

இன்னும் தீராத முதுகலை பட்டதாரிகள் தேர்விற்கான தீர்ப்பு

முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட போட்டித்தேர்வில் தேர்ச்சி பெற்றும் இரட்டை பட்டம் (Double Degree) பயின்றதன் காரணமாக பணிநியமனம் வழங்கப்படாத 5 முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு 5 பணியிடங்களை தற்காலிகமாக ஒதுக்கி அரசிடம் விளக்கம் கோரி உயர்நீதி மன்றம் உத்தரவு
கடந்த மே 2012ல் நடைபெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட போட்டித்தேர்வில் தேர்ச்சி பெற்றும் இரட்டை பட்டம் (Double Degree) பயின்றதன் காரணமாக பல ஆசிரியர்களுக்கு பணிநியமனம் வழங்கப்படவில்லை.
இவர்கள் ஏற்கனவே பயின்ற ஒரு இளங்கலை பட்டத்தின் அடிப்படையில் வேறொரு ஒருஇளங்கலை பட்டத்தை முடித்து அதன் அடிப்படையில் முதுகலை பட்டத்தை முடித்தவர்கள். முதல் மற்றும் இரண்டாம் தேர்ச்சிப்பட்டியலில் இவர்களை "SELECTED" என்று குறிப்பிட்ட போதும் கடைசி தேர்ச்சி பட்டியலில் "NOT SELECTED" என தேர்விக்கப்பட்டது, இதனால் பதிக்கப்பட்ட ஆசிரியர்கள் பெரும் வேதனைக்கு உள்ளாகினர். இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் அனுகியபோது, "உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புப்படி இரட்டை பட்டம் பயின்றோருக்கு பணி வழங்க இயலாது" என விளக்கமளித்ததால், இதனால் பலர் நீதிமன்றத்தை அனுகினர்.
இந்நிலையில் பல்வேறு மாவட்டத்தை சேர்ந்த 5 பதிக்கப்பட்ட ஆசிரியர்கள்ஒன்றிணைந்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். 21.12.2012 அன்று இவ்வழக்கின் விசாரணை தொடங்கியது. தாங்கள் போட்டித்தேர்விற்கான விண்ணப்பம் அளித்தபோது இரட்டை பட்டம் பணிநியமனத்திற்கு தகுதியுடையது என்று தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் ஆசிரியர் தேர்வு வாரியமும் உயர்கல்வி ஆணையமும் தகவல் அளித்ததையும், 100க்கும் மேற்பட்ட ஆவணங்களையும் மனுதாரர் தரப்பில் அளிக்கப்பட்டது. மேலும் "TAMILNADU HIGHER EDUCATION COUNSEL" இரட்டை பட்டங்கள் பணிநியமத்திற்கு தகுதியுள்ளது என சான்றளித்ததற்கான சான்றுகளையும் சமர்பித்ததாக தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து வழக்கு தொடுத்துள்ள 5 ஆசிரியர்களுக்கும் 5 பணி இடங்களை தற்காலிகமாக ஒதுக்கியும் இப்பணியிடங்கள் ஏற்கனவே விசாரணையில் இருக்கும் அனைத்து முதுகலை ஆசிரியர் நியமனம் தொடர்பான இறுதித்தீர்புக்கு உட்பட்டது என்றும், இடைப்பட்ட காலத்தில் இணையவழி கலந்தாய்வு நடைபெற்றால் இவர்களை பங்கேற்க அனுமதிக்கலாம் என்றும். இதுகுறித்து விளக்கத்தினை 15 நாட்களுக்குள் அளிக்க அரசுக்கும் கல்வித்துறைக்கும் உயர்நீதி மன்றநீதிபதி திரு.வெங்கடராமன் உத்தரவிட்டார்.

நன்றி S.Murugavel M.sc.,B.Ed 

சென்னை: இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் தேர்வில் நடந்த, குளறுபடிகளை தொடர்ந்து, முதுகலை ஆசிரியர் தேர்விலும், பெரும் குளறுபடி நடந்திருப்பது, வெளிச்சத்திற்கு வந்துள்ளது. உடல்தகுதி நன்றாக இருப்பவர்கள் பலர், ஊனமுற்றோர் பிரிவில் தேர்வாகி உள்ளனர். மேலும், சரியான கல்வித்தகுதி இல்லாதவர்களும், இறுதி பட்டியலில் தேர்வாகி உள்ளனர். இவர்களை, தேர்வுப் பட்டியலில் இருந்து நீக்கும் பணிகள் நடந்து வருவதால், ஓரிரு நாளில், புதிய தேர்வுப் பட்டியல் வெளியாக உள்ளது.
அதிகார வட்டாரத்தில் இருந்து வந்த, நெருக்கடி காரணமாக, டி.இ.டி., ஆசிரியர் தேர்வுப் பணி, இடியாப்ப சிக்கலாக மாறி, டி.ஆர்.பி., தவியாய் தவித்து வருகிறது. பணி நியமனத்திற்கு முன், சான்றிதழ்களை சரியாக சரிபார்க்காமல் கோட்டை விட்டுவிட்டு, 18 ஆயிரம் பேருக்கு, பணி நியமனம் வழங்கியாகி விட்டது. உத்தரவுகளை பெற்றவர்கள், பணியிலும் சேர்ந்துவிட்டனர்.ஆனால், இப்போது, மீண்டும் சான்றிதழ்களை சரிபார்க்கும் பணி, சத்தமில்லாமல், டி.ஆர்.பி.,யில் நடந்து வருகிறது.
பணியில் சேர்ந்து, சம்பளமும் வாங்கிய பின், அவர்களை பணி நீக்கம் செய்ய முடியுமா என்பது தெரியவில்லை.அப்படி பணி நீக்கம் செய்தால், அரசுத் தரப்பின் மெத்தனப்போக்கு, வெட்ட வெளிச்சத்திற்கு வருவதுடன், பாதிக்கப்படுபவர்கள், கோர்ட் படியேறும் நிலை உருவாகலாம். இதுபோன்ற நிலையில், முதுகலை ஆசிரியர் தேர்விலும், குளறுபடி நடந்திருப்பது தெரியவந்துள்ளது.
18 ஆயிரம் ஆசிரியர்களுக்கு, பணி நியமன உத்தரவு வழங்கும் விழா, 13ம் தேதி, சென்னையில் நடந்தது.அதிகமான ஆசிரியர்களுக்கு, உத்தரவு வழங்குவதை காட்டுவதற்காக, கடைசி நேரத்தில், திடீரென, 2,308 முதுகலை ஆசிரியர்கள் தேர்வு பட்டியலும் வெளியிடப்பட்டது. மொத்தம், 2,895 பேரை தேர்வு செய்ய, தேர்வு நடத்திய போதும், வழக்கு காரணங்களால், 587 பணியிடங்களை, "ரிசர்வ்" செய்துவிட்டு, மீதமுள்ள பணியிடங்களுக்கு மட்டும், தகுதியானவர்கள் பட்டியலை, டி.ஆர்.பி., வெளியிட்டது.
முதல்வர் விழாவில், 2,308 பேருக்கும், தேர்வுக்கான உத்தரவு மட்டுமே வழங்கப்பட்டது. இன்னும், அவர்களுக்கு, பணி ஒதுக்கீட்டு ஆணை வழங்கவில்லை. டி.ஆர்.பி.,யில் இருந்து, 2,308 பேர் சம்பந்தமான கோப்புகளை, பள்ளி கல்வித்துறையிடம் ஒப்படைத்து, டி.ஆர்.பி., தலைவர், "தேர்வுக் கடிதம்" வழங்கிய பின், அவர்களை பணி நியமனம் செய்வதற்கான பணியை, கல்வித்துறை செய்யும்.
இதுவரை, டி.ஆர்.பி.,யில் இருந்து, கல்வித்துறையிடம், கோப்புகள் ஒப்படைக்கவில்லை. தேர்வு பெற்றவர்கள் அனைவரும், தகுதியானவர்கள் தானா என்பதை, மீண்டும் ஒருமுறை சரிபார்க்கும் பணியில், டி.ஆர்.பி., மும்முரமாக ஈடுபட்டுள்ளது. இதற்கிடையே, தகுதியில்லாதவர்கள் பலர் தேர்வு பெற்றுள்ள தகவலை, டி.ஆர்.பி.,யின் கவனத்திற்கு, பல தேர்வர்கள் கொண்டு சென்றனர்.
புகார்களை அலட்சியப்படுத்தாமல், கவனமுடன் ஆய்வு செய்த, டி.ஆர்.பி., தகுதியற்றவர்கள் பலர், தேர்வாகி இருப்பதை கண்டுபிடித்துள்ளது. உடல்திறன் நன்றாக இருப்பவர்கள் பலர், ஊனமுற்றோர் பிரிவில் தேர்வு பெற்றுள்ளனர். ஊனமுற்றோர் பிரிவில், "கட்-ஆப்" மதிப்பெண்கள் குறைவு என்பதால், இந்தப் பிரிவில், பலர் தேர்வாகி உள்ளனர். இவர்களுடைய தேர்வு, உடனடியாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்தப் பிரிவில் மட்டும், 20க்கும் மேற்பட்டோர், நீக்கப்பட்டிருக்கலாம் என, கூறப்படுகிறது.
 சரியான கல்வித்தகுதி இல்லாதவர்களும், இறுதி தேர்வுப் பட்டியலில், தேர்வாகி உள்ளனர். எம்.எஸ்சி., ஆர்கானிக் கெமிஸ்ட்ரி, எம்.எஸ்சி., கெமிஸ்ட்ரி படிப்பிற்கு நிகரானது கிடையாது. ஆனால், ஆர்கானிக் கெமிஸ்ட்ரி படித்தவர்களும், தேர்வாகி உள்ளனர். ஆர்கானிக் கெமிஸ்ட்ரி படித்த ஒருவர், பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணியில் தேர்வாகியும், சரியான கல்வித்தகுதி இல்லை என கூறி, அவரது தேர்வை, டி.ஆர்.பி., நிராகரித்துள்ளது. ஆனால், அதே தேர்வர், முதுகலை ஆசிரியர் தேர்வில், தேர்வாகி உள்ளார். இது எப்படி சாத்தியம் என, தேர்வர்கள் கொதிக்கின்றனர்.
"கம்யூனிகேட்டிவ் இங்கிலீஷ்" படித்தவர்கள், ரெகுலர், "ஆங்கிலம்" பாடத்திற்கு நிகரானவர்கள் கிடையாது. ஆனால், "கம்யூனிகேட்டிவ் இங்கிலீஷ்" படித்தவர்கள் பலர், தேர்வு பெற்றுள்ளனர். இதுபோன்ற தகுதியற்றவர்களை கண்டுபிடித்து, அவர்களை, தேர்வுப் பட்டியலில் இருந்து, நீக்கும் பணியில், டி.ஆர்.பி., ஈடுபட்டுள்ளது.
இதன் காரணமாக 50க்கும் மேற்பட்டோர் நீக்கப்படலாம் என கூறப்படுகிறது. தகுதியற்றவர்கள் நீக்கத்தால், அடுத்த, "ரேங்க்"கில் உள்ளவர்களை தேர்வு செய்து, அவர்களின் சான்றிதழ்களையும் சரிபார்க்க வேண்டிய கட்டாயத்தில், டி.ஆர்.பி., உள்ளது. எனவே, ஓரிரு நாளில், புதிய தேர்வுப் பட்டியலை எதிர்பார்க்கலாம்.
டி.இ.டி., மற்றும் முதுகலை ஆசிரியர் தேர்வில், இன சுழற்சி வாரியாக, "கட்-ஆப்&' மதிப்பெண்கள் விவரங்களை, இதுவரை, டி.ஆர்.பி., வெளியிடவில்லை. அதேபோல், இணையதளத்தில், தனிப்பட்ட தேர்வர், தங்களுடைய தேர்வை தெரிந்து கொள்வதற்கு ஏற்ப மட்டுமே, தகவல் தரப்படுகிறது. பாட வாரியாக தேர்வு பெற்ற அனைவரின் தகவல்களையும், ஒரே பட்டியலில் வெளியிடுவது இல்லை.
இதுபோன்று பட்டியல் வெளியிட்டால், தகுதியானவர்கள் மட்டும் தான் தேர்வாகி இருக்கிறார்களா என்பதை, அனைவருமே தெரிந்து கொள்ள முடியும். தற்போது, அதற்கு வழியில்லாமல் உள்ளது. டி.இ.டி., தேர்வில், தேர்வு பெற்றவர்களின் பெயர் விவரங்களையும், அவர்கள், பிரிவு வாரியாக பெற்ற மதிப்பெண்கள் விவரங்களையும், அனைத்து தேர்வர்கள் பார்வைக்கு, டி.ஆர்.பி., வெளியிட வேண்டும்.
இப்படி எதையுமே செய்யாமல், "வெளிப்படையாக தேர்வுப் பணிகள் நடக்கிறது" என, டி.ஆர்.பி., திரும்ப திரும்ப கூறி வருவது, தேர்வர்களை எரிச்சல் அடைய செய்துள்ளது.

நன்றி http://www.tamilagaasiriyar.com/2012/12/blog-post_6533.html 

Monday, December 24, 2012

ஆசிரியர் நியமனத்தில் இடஓதுக்கீடு கடைபிடிக்காதது தவறா? சரியா?

கடந்த 13 ஆம் தேதி பணி நியமன ஆணைகளை வாங்கிய அனைத்து ஆசிரியர்களுக்கும் கிடைத்த அதிர்ச்சி அதில் இருந்த 15 விதிமுறைகள் தான்.

Terms and Condition என்ற பெயரில் பல பொருட்களை வாங்கும் போது அதில் இருக்குமே அதே போலதான் இருந்தது அந்த ஆணை. அதில் முதல் செய்தியே ‘இந்த நியமனம் நிலுவையில் உள்ள உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு உட்பட்டது என்பதே.

 ஆசிரியர் பணி நியமனத்தில் SC,ST, மாற்றுத்திறனாளிகளுக்கு மத்திய அரசு நினைத்தால் 5 சதவிகிதம் முதல் 15 சதவிகிதம் வரை மதிப்பெண்ணில் குறைத்து சலுகை வழங்கலாம் என்ற TET விதிமுறையை மையப்படுத்தி தொடர்ப்பட்ட வழக்கின்படி விசாரணை நடந்து வருகிறது.

அது மட்டும் இல்லாமல் சாதிய அடிப்படையில் பணிநியமன ஒதுக்கீது சரியாக அமல் படுத்தவில்லை என்பதும் ஒரு வழக்காக இன்று நிலுவையில் உள்ளது.

ஆசிரியர்கள் இல்லாமல் பல பள்ளிகளை இந்த மூன்று ஆண்டுகளாக இருந்த ஆசிரியர்களை வைத்து சரிகட்டி ஓட்டி வந்திருக்கிறது நம் அரசு. ஆசிரியர் தகுதித் தேர்விலாவது தகுதியான ஆசிரியர்கள் கிடைப்பார்கள் என்ற நம்பிக்கையில் வைக்கப்பட்ட TET தேர்விலும் போதுமான ஆசிரியர்கள் கிடைக்க பெற வில்லை. எனவே மீண்டும் மறுத் தேர்வாக பணம் இன்றி - இலவசமாகவே ஒரு தேர்வினை மனிதாபிமான முறையில் நடத்தினார்கள் அதில் கிடைத்ததும் பாதி வெற்றிதான்.

அதாவது பட்டதாரி ஆசிரியர்களில் 20,000 பேருக்கு பதிலாக தேர்வானது 10 ஆயிரம் தான். அது போல இடைநிலை ஆசிரியர்களும் இன்னும் தேவை என்ற அடிப்படையிலேயே தேர்வான அனைவருக்கும் பணிநியமனம் அளிக்கப்பட்டது.


இதில் இடஒதுக்கீடு என்பதை விட தகுதியான ஆசிரியர்கள் என்பதைதான் அரசு தன் முழு கவனத்தில் கொண்டு செய்திருக்கிறது.  ஆயினும் 80 மதிப்பெண்ணிற்கு மேல் எடுத்த SC,ST, மற்றும் மாற்றுதிறனாளிகளின் சார்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனுக்கள் இன்றும் குவிந்து கொண்டுதான் வருகின்றன.

நீதி மன்ற தீர்ப்பு என்ன வரபோகிறதோ! என்பது இன்று பணியில் அமர்த்தப்பட்டுள்ள 20 ஆயிரம் ஆசிரியர்களின் முழுமுதல் கேள்வியாக உள்ளது.

பணியில் அமர்த்தியவர்களை நீக்கி விட்டு - ஒரு முறையை கூறி நீதி மன்றம் அமல் படுத்த கூறினால் மற்ற பிற வேலைகளை துறந்து இந்த வேலையை தஞ்சம் புகுந்துள்ள பலருக்கு அது பெரிய சிக்கலாகவே அமையும்.


‘இனி வரும் காலங்களிலாவது‘ முறையான அணுகுமுறையை பின்பற்ற வேண்டும் என்ற தீர்ப்பு கிடைக்கும் பட்சத்தில் வேலைக்கு சென்று கொண்டிருக்கும் 20 ஆயிரம் பேரின் நிஜம் கனவாக மாறாமல் தப்பிக்கும்..

Sunday, December 23, 2012

தங்களின் மேலான எதிர்பார்ப்பிற்கு நன்றிகள்.

இந்த வலைபூ பற்றிய தங்களின் மேலான கருத்துகளுக்கும் எதிர்பார்ப்புகளுக்கும் என் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.

எனக்கென்று ஒரு வேலை வெட்டி இல்லாத நேரத்தில் தொடங்கப்பட்டதே இந்த  வலைபூ.  வேலை இல்லாத ஒருவனை இந்த சமூகம் எவ்வாறெல்லாம் பார்க்கும்? அவனின் மனநிலை எவ்வகையில் எல்லாம் இருக்கும் என்பதை எல்லாம் இந்த 6 மாதத்தில் அனுபவ ரீதியாக உணர்ந்திருக்கிறேன் நான்.

அதன் விளைவாக நான் எடுத்த முயற்சியின் காரணமாக,  TNPSC Group 4 தேர்வில் typist ஆகவும், TNTET 2012 தேர்வில் இடைநிலை ஆசிரியராகவும் தேர்ச்சி பெற்றுள்ளேன்.

அது மட்டும் அல்லாமல் எந்த ஒரு Central Govt வேலையையும் நான் விட்டதில்லை இந்த ஏழு மாதத்தில்.  இவற்றின் காரணமாகதான் இந்த வலைபூ இப்படி பட்ட ஒரு நிலையை கொண்டு உங்களுக்கு காட்சி அளிக்கிறது.

எனது தேவைகளை மையப்படுத்திய ஒரு தொகுப்பாகவே இந்த வலைபூவினை நான் உருவாக்கி உள்ளேன். ஆனால் எனது தேவைகள் நான் ஒரு பணியில் அமர்த்தப்பட்டுள்ளபடியால் ( ஓர் ஆசிரியராக) எனது பார்வையும்... பயணமும் சிறு மாற்றங்களை அடைந்திருப்பதை இந்த ஒரு வாரத்தில் என்னால் உணர முடிகிறது.

எனவே கடந்த ஒன்றிரண்டு வாரங்களாக நான் தினசரி update செய்யும் எந்த செய்தியும் சரியாக update செய்ய முடியாமல் போயிருப்பதை என்னால் உணர முடிகிறது.

இருப்பினும் தினமும் குறைந்தது 500 பார்வையாளர்களையாவது இந்த வலைபூ பெற்று வருவதை நினைக்கும் பொழுது இந்த பணிகளை தொடர்ந்து செய்யவே நான் மிகவும் விரும்புகிறேன்.

இந்த வலைபூவில் என்னென்ன விடயங்களை நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்? எப்படி எல்லாம் இதை மாற்றி அமைக்க நீங்கள் நினைக்கிறீர்கள் என்பதை என் இமெயிலுக்கு jagan.nathan801@gmail.com அனுப்புங்கள் . என் முகநூல்  பக்கத்திலும் எழுதலாம் https://www.facebook.com/jackn.nath.

உங்களுக்கு தெரியவரும் வேலைவாய்ப்பு செய்திகளை இந்த வலைபூ பக்கத்தில் இடம் பெற செய்யுங்கள் உங்கள் பெயர் மற்றும் இணைய இணைப்பினையும் அனுப்புங்கள்.

தங்களின் எதிர்பார்ப்பிற்கிணங்க இந்த வலைபூ தன் சேவையை வழங்கும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

Wednesday, December 19, 2012

தமிழகத்தில் மட்டும் ஒரு லட்சத்து 27 ஆயிரம் அரசாங்க பணியிடங்கள் காலி...

இந்த ஆண்டு மட்டும், 1.27 லட்சம் பேர் ஓய்வு, காலியாகும் அரசு பணியிடங்கள் - முறையான ஊழியர் நியமனம் நடக்குமா?
தமிழக அரசுத்துறைகளில் பணியாற்றி வரும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களில், இந்த ஆண்டு மட்டும், 1.27 லட்சம் பேர் ஓய்வு பெறுகின்றனர். இதில், 52 ஆயிரம் ஆசிரியர்களும் அடங்குவர். இதனால் அரசுத்துறைகளில் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை அதிரடியாக அதிகரிக்கிறது.
தமிழகத்தில் மொத்தம், 142 அரசுத் துறைகள் உள்ளன. கடந்த, 1996ம் ஆண்டு,ஜனவரி 1ம் தேதி எடுக்கப்பட்ட அரசு ஊழியர்களுக்கான கணக்கெடுப்பின்படி, 6 லட்சம் ஆசிரியர்கள், 3 லட்சம் அரசுஊழியர்கள், 1 லட்சம் சீருடை பணியாளர்கள் மற்றும் 2 லட்சம் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் தொழிலாளர்கள் என, மொத்தம் 12 லட்சம் அரசு ஊழியர்கள் உள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.
2001 முதல் 2005 வரை அதிகரிப்பு
கடந்த, 2001ம் ஆண்டு முதல், 2005ம் ஆண்டு வரை, தமிழகத்தில் வேலை நியமன தடைச்சட்டம் அமலில் இருந்தது. இதனால், தமிழகத்தில் ஐந்து ஆண்டுகளாக, புதிய பணியாளர்கள் நியமனம் செய்யப்படவில்லை. அதேசமயம், அரசுப்பணிகளில் இருந்து, ஓய்வு பெறும் அரசு ஊழியர்களின் எண்ணிக்கை, தொடர்ந்து அதிகரித்தே வந்தது.
இந்திய தலைமை கணக்காய்வு நிறுவனத்தின், தமிழக பிரிவில், பணியாற்றும் அதிகாரி ஒருவர் கூறியதாவது: எங்களது அலுவலகத்தின் சார்பில், ஓய்வு பெறும் அரசு ஊழியர்களுக்கு ஓய்வு ஊதியம் வழங்கும் ஆணை எண் வழங்கப்படும். அதன்படி, தமிழகத்தில் கடந்த, 1993ம்ஆண்டு முதல் 2006ம் ஆண்டு வரை ஆண்டுதோறும், 25 ஆயிரம் அரசு ஊழியர்கள் ஓய்வு பெற்றனர்.
2011ல் 40 ஆயிரம் பேர் ஓய்வு
இந்த எண்ணிக்கை சற்று அதிகரித்து, 2007ம் ஆண்டு முதல், 2011ம் ஆண்டு வரை, ஆண்டுதோறும், 40 ஆயிரம் பேர் ஓய்வு பெற்றனர். இந்நிலையில், 2012-13ம் நிதியாண்டில் மட்டும், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள்என ஒட்டுமொத்தமாக, 1.27 லட்சம் பேர் ஓய்வு பெறுகின்றனர். இதில் 52 ஆயிரம் ஆசிரியர்களும் அடங்குவர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கடந்த, 1991ம் ஆண்டுக்கு முன்பு வரை, மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில், அரசுத் துறைகளுக்கு பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டனர். ஒவ்வொரு மாவட்டத்திலும் மக்கள் தொகைக்கு ஏற்ப, அரசின் நலத் திட்டங்கள், சரியான முறையில் சென்றடைய வேண்டுமானால், அதற்கு எந்த அளவுக்கு ஊழியர்கள் தேவை; அந்த ஊழியர்களின் பணிகள் என்னென்ன என்பதுஉள்ளிட்ட, பல விஷயங்கள் ஆய்வு செய்யப்பட்டு, அதற்கேற்ப அரசுத்துறைகளில், புதியதாக ஆட்கள் நியமனம் செய்யப்பட்டனர். ஆனால், இந்த நடைமுறை, 1991ம் ஆண்டுக்கு பின்னர் பின்பற்றப்படுவதில்லை. ஒவ்வொரு துறைக்கும், தோராயமாகவே ஆட்களை நியமனம் செய்கின்றனர்.
ஊழியர்களுக்கு பணி சுமை
அவர்களின் பணிகளும் வரைமுறைப்படுத்தப்படுவது இல்லை. இதனால் அரசு ஊழியர்களுக்கு கூடுதல் பணிச்சுமையும், பொதுமக்களுக்கு அலைச்சலும் ஏற்படுகிறது. மத்திய அரசின், 13 வது நிதி ஆணைக்குழு, தமிழக அரசுக்கு சில பரிந்துரைகளை, 2011ம் ஆண்டு அக்டோபர் மாதம் வழங்கியது.
அதில், "தமிழகம் வளர்ந்த மாநிலமாக உள்ளது. எனவே மத்திய அரசின் தொகுப்பில் இருந்து, தமிழகத்துக்கு போதிய அளவில் நிதி வழங்க முடியாது. எனவே தங்களது சொந்த நிதியில் இருந்தே செலவினங்களை தமிழக அரசு கவனித்து கொள்ள வேண்டும்" என தெரிவித்திருந்தது. மேலும், "ஓய்வு பெறும் அரசு ஊழியர் பணியிடங்களுக்கு, ஒப்பந்த அடிப்படையில் புதியதாக ஆட்களை நியமனம் செய்யலாம். இதனால் அரசுக்கும் செலவினங்கள் குறையும்" என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து, அகில இந்திய மாநில அரசு ஊழியர் சம்மேளனத்தின் தலைமை நிலைய செயலர் சீனிவாசனிடம் கேட்டபோது, "நிதி நிலையை காரணம் காட்டி, அரசுப்பணியிடங்கள் குறைக்கப்பட்டு வருகின்றன. ஆசிரியர்பணியிடங்களை உடனுக்குடன் நிரப்புவதில் கவனம்செலுத்தும் அரசு,மற்ற அரசுத் துறைகளிலும் காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.
ஓய்வுக்கு பிறகும் வேலை
அரசு ஊழியர்கள் ஓய்வு பெற்ற பின்னரும், மீண்டும் அவர்களுக்கே ஒப்பந்த அடிப்படையில், பணிகள் வழங்கப்படுகிறது. கருவூல கணக்கு துறையில் பணியாற்றி வந்த, 300 உதவி கருவூல அலுவலர்கள், சமீபத்தில் ஓய்வு பெற்றனர். ஆனால், இந்த பணியிடங்களுக்கு புதியதாக ஆட்கள் நியமனம் செய்யப்படவில்லை.
மாறாக, ஓய்வு பெற்றவர்களே ஒப்பந்த அடிப்படையில், பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதேபோல் புள்ளியல் துறையில், சமீபத்தில் ஓய்வு பெற்ற, 120 பேருக்கு, ஒப்பந்த அடிப்படையில், மீண்டும் பணி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனால்வேலைவாய்ப்பு அலுவலகங்களில், பதிவு செய்து வைத்து, அரசு வேலைக்காக காத்திருக்கும், 75 லட்சம் பேரின் கனவு கேள்விக்குறியாகி உள்ளது. 

Saturday, December 15, 2012

சில செய்திகள்... உங்களுக்காக PG TRB, Speech by Minister.

6 மாதங்களில் 1,200 முதுகலை ஆசிரியர்கள் நியமனம்: ஜனவரியில் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு
அடுத்த ஆண்டு, மே மாதத்திற்குள், மேலும், 1,200 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்ப கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பு, அடுத்த மாதம் வெளியாகவுள்ளதாக, கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
டி.இ.டி., தேர்வில் தேர்வு பெற்ற, 18 ஆயிரம் ஆசிரியர்களுக்கு மட்டும், முதலில் பணி நியமன உத்தரவுகள் வழங்குவதாக, திட்டமிடப்பட்டிருந்தது. பின், திடீரென, முதுகலை ஆசிரியர்களும், பட்டியலில் சேர்க்கப்பட்டனர். முதல்வர் ஜெயலலிதா பங்கேற்ற விழாவில், 2,895 பணியிடங்களில், 2,308 பேரை மட்டும் தேர்வு செய்து, பங்கேற்க செய்தனர். இவர்களுக்கு, பணி நியமன உத்தரவுகள் வழங்கப்பட்டன. ஆனால், பணியிட ஒதுக்கீட்டிற்கான உத்தரவு வழங்கப்படவில்லை. இந்த உத்தரவு எப்போது வழங்கப்படும் என்ற தகவல் தெரியாமல், தேர்வு பெற்றவர்கள் குழப்பமடைந்துள்ளனர்.
தேர்வு செய்யப்பட்ட முதுகலை ஆசிரியர்களின், புகைப்படங்களுடன் கூடிய விவரங்களை, பள்ளிக் கல்வித் துறையிடம், இன்னும் டி.ஆர்.பி., ஒப்படைக்கவில்லை. இதனால், 2,308 பேரின், பணி நியமனம், எப்போதுநடக்கும் என, தெரியாத நிலை உள்ளது.
கல்வித்துறை வட்டாரத்தினர் கூறுகையில்,"டி.ஆர்.பி.,யில் இருந்து, உரிய ஆவணங்கள் வந்ததும், பணி நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். மற்ற ஆசிரியர்களைப்போல், முதுகலை ஆசிரியர்களும், "ஆன்-லைன்' வழியில், கலந்தாய்வு நடத்தி, பணி நியமனம் செய்யப்படுவர்' என, தெரிவித்தனர். கடந்த, கல்வியாண்டுக்கான, காலி பணியிடங்களுக்குத் தான், தற்போது நியமனம் நடக்கிறது. 2,895 பணியிடங்களில், 2,308 பேர் நியமிக்கப்பட்டால், பிளஸ் 1, பிளஸ் 2 பயிலும் மாணவர்களின் படிப்பில் பாதிப்பு ஏற்படாது. அடுத்த ஆண்டு, மே மாதத்திற்குள்,மேலும், 1,200 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இந்த பணியிடங்களை நிரப்ப, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, டி.ஆர்.பி.,க்கு, கல்வித் துறை தெரிவித்துள்ளது. எனவே, ஜனவரியில், புதிய முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு, போட்டித்தேர்வு அறிவிக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. தர்மபுரி, வேலூர், கிருஷ்ணகிரி, விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய வட மாவட்டங்களில் தான்,அதிக காலி பணியிடங்கள் உள்ளன. எனவே, அனைத்து ஆசிரியர்களும், மேற்கண்ட மாவட்டங்களில், பணி நியமனம் செய்யப்படுவர் என, கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

Friday, December 14, 2012

இந்த வழக்கு தொடுப்பவர்களுக்கு மனசாட்சியே இல்லையோ!

TET நியமன உத்தரவுகளை வழங்க தடை விதிக்க மனு: அரசு இரண்டு வாரத்திற்குள் பதிலளிக்கவும், ஆசிரியர் நியமனங்கள் இறுதி தீர்ப்பிற்கு உட்பட்டது எனவும் உயர்நீதிமன்றம் உத்தரவு
பட்டதாரி, இடைநிலை ஆசிரியர்கள் தேர்வை, ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சில் வழிமுறைப்படி நடத்தக் கோரி, சென்னை ஐகோர்ட்டில், மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனுவுக்குப் பதிலளிக்கும் படி, அரசுக்கு, "முதல் பெஞ்ச்" உத்தரவிட்டது. "மனு மீதான, இறுதி உத்தரவைப் பொறுத்து, நியமனங்கள் அமையும்" எனவும் உத்தரவிட்டது.
சென்னையைச் சேர்ந்த, வழக்கறிஞர் எம்.பழனிமுத்து என்பவர், தாக்கல் செய்த மனு: ஆசிரியர் தகுதி தேர்வில், மூன்று லட்சத்து, 73 ஆயிரத்து, 696 பேர், கலந்து கொண்டனர். பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில், 8,808 பேர்,தேர்ச்சி பெற்றனர். 
தேர்வு முடிவை, ஜாதி வாரியாகவும், பாட வாரியாகவும், வெளியிட தவறி விட்டனர். இதில், உள்நோக்கம் உள்ளது. ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மாற்று திறனாளிகளுக்கு, உண்மையை மறைத்துள்ளனர்.
கடந்த ஆண்டு, ஏப்ரல் மாதம், ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சில், ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதில், தகுதிமதிப்பெண்ணில், ஆதிதிராவிடர், பழங்குடியினர், மாற்று திறனாளிகளுக்கு, ஐந்து சதவீதம் தளர்த்தப்பட்டது. அதன்படி, ஆந்திராவில், 10 சதவீதம், ராஜஸ்தானில், ஐந்து சதவீதம், தளர்த்தப்பட்டுள்ளது. 
ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட அறிவிப்பில், தகுதி மதிப்பெண் தளர்வு பற்றி, எதுவும் குறிப்பிடப்படவில்லை. ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சிலின் வழிமுறைகளை பின்பற்றாமல், தேர்வு நடத்துவது, முடிவை வெளியிடுவது, தவறானது. 
எனவே, நியமன உத்தரவுகளை வழங்க, தடை விதிக்க வேண்டும். தேசிய கவுன்சிலின் வழிமுறைகளை பின்பற்றி, பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்களுக்கான தேர்வை நடத்த, உத்தரவிட வேண்டும். இவ்வாறு, மனுவில்கூறப்பட்டுள்ளது.
இம்மனு, தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் அடங்கிய, "முதல் பெஞ்ச்" முன், விசாரணைக்கு வந்தது. மனுவுக்குப் பதிலளிக்கும்படி, அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை, இரண்டு வாரங்களுக்கு, "முதல் பெஞ்ச்"தள்ளிவைத்தது.
"நியமனங்கள் எதுவும், ரிட் மனு மீதானஇறுதி உத்தரவைப் பொறுத்து அமையும்" என, "முதல் பெஞ்ச்" உத்தரவிட்டது.


ஆசிரியர் தகுதித் தேர்வினில் வெற்றி பெற்ற அனைவருக்கும் பணிநியமனம் அளிக்கப்பட்டுவிட்ட நிலையில் இப்படி ஒரு வழக்கு தேவைதானா?  ‘தான் வாழாவிட்டால் எவனும் வாழக்கூடாது!‘ என்ற மக்களின் மனநிலை நியாயமானதா? 

அப்படி தகுதி மதிப்பெண்ணில் தளர்வு வேண்டும் என்பர்கள் தேர்வு அறிவிக்கப்பட்ட நாளிலேயே வழக்கு தொடர்ந்து தேர்விற்கே இடைகாலத்தடை வாங்கி இருக்க வேண்டாமா?

அனைத்தும் முடிந்து 20 ஆயிரம் ஆசிரியர்கள் மகிழ்ச்சியில் இருக்கும் போது இப்படிபட்ட வழக்கினை தொடுப்பவரை என்ன என்று சொல்வது?

Thursday, December 13, 2012

YMCA இல் ஒரு நாள் ... அனுபவமும் ஓர் அலசலும்.

அதிரடியாய் யாரும் நினைக்காத நேரத்தில் வந்தது Selection List  இடைநிலை ஆசிரியர் - பட்டதாரி ஆசிரியர் - முது கலை பட்டதாரி ஆசிரியர் என அனைவருக்கும்.

இதில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு நடத்தப்பட்டு அழைக்கப்பட்டனர் 13 ஆம் தேதி பணிநியமன ஆணை பெற சென்னை YMCA க்கு.

20 ஆயிரம் என்பது எண்ணால் பார்க்கும் போது அது சிறிதாகதான் படுகிறது. ஆனால் நேரில் பார்த்ததுமே வியந்துவிட்டேன்! திருவிழா கூட்டத்தினை விட 10 மடங்கு கூட்டம்.

அதிகாலை 4 மணிக்கு YMCA மட்டைபந்து திடலில் சென்று அமர்ந்தோம். மாவட்ட வாரியாக இடங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன. தென் மாவட்டங்கள் அனைத்தும் மேடையிலிருந்து 1 கிலோமீட்டர் தொலைவிலும் வட மாவட்டங்கள் அனைத்தும் மேடைக்கு மிக அருகிலும் அமைவிடம் தரப்பட்டிருந்தது.

காலை கடன்களை செய்ய mobile toilet எனப்படும் தற்காலிக கழிப்பறைகளையே அமைத்திருந்தனர். ஆண்களுக்கு பரவாயில்லை ஆனால் பெண்கள்தான் 2 மணி நேரம் காத்துக்கிடந்து தங்கள் இயற்கை உபாதைகளை தீர்க்க வேண்டிய கட்டாயமாகிவிட்டது. எனது அருகில் அமர்ந்திருந்த ஆசிரியர் ஒருவர் ‘இதற்குதான் ஆணாய் பிறந்திருக்க வேண்டும் என்று கூறினார்‘ அவரின் 2 மணிநேர காத்திருப்பு அவரை அப்படி சொல்ல செய்திருந்தது.  இவ்வளவு பெரிய கூட்டத்திற்கு சரியான கழிப்பிட வசதியை தண்ணீர் வசதியுடன் செய்து கொடுத்திருந்தால் மிகவும் சிறப்பாக இருந்திருக்கும்.

பிறகு 8 மணி அளவில் அனைவருக்கும் பொங்கல் காலை உணவாக வழங்கப்பட்டது. ஏற்கனவே இரவு முழுக்க அலைச்சலில் பயணமாக வந்திருந்த ஆசிரியர்கள் அனைவரும் அந்த பொங்கலை உண்டவுடன் என்ன நடந்திருக்கும் என்பது உங்களுக்கே தெரியும்.

அனைவரின் தலையும் கீழே விழுந்து சொக்கிவிட்டனர். காலை 11 மணி வரை ஒரே தூக்க மயக்கத்தில் இருந்த அவர்களை தட்டி எழுப்பியது முதல்வர் அவர்களின் வருகை.

சரியாக 12 மணிக்கு விழா மேடைக்கு வருகை தந்திருந்தார் தமிழக முதல்வர் அவர்கள். விழா மேடையில் கல்வி அமைச்சர் - முதல்வர் - தமிழக செயலாளர் திரு.சாரங்கி அவர்கள் - கல்வித்துறை இயக்குநர் திருமதி. சரிதா அவர்கள் என நான்கு பேர் மட்டுமே அமர்ந்திருந்தனர்.

வழக்கமாக தி.மு.க அமைச்சரவையாக இருக்கும்போது அனைத்து அமைச்சர்களும் முன்னிலை படுத்தி பேசப்படுவது வழக்கம் ஆனால் ஆ.தி.மு.க விழாவினில் அமைச்சர்களின் பெயர் கூட வெளியில் வராது போல... விழாவிற்கு அனைத்து அமைச்சர்களும் வந்திருந்த வேலையில் மேடையில் கல்வித்துறை சார் அமைச்சர் மட்டுமே முன்னிலைபடுத்தப்பட்டிருந்தார். எனினும் அவரின் பதவி மட்டுமே அறிவிக்கப்பட்டது மேடையில் பெயர் விடுபட்டுவிட்டது. அந்த அளவு விழாவில் முன்னிலைபடுத்தப்பட்டிருந்தவர் முதல்வர் ஒருவரே.

36 ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணைகளையும் 18 மாணவர்களுக்கு நலதிட்ட உதவிகளையும் கொடுத்து இந்த விழாவின் முக்கிய நிகழ்வு நடந்தது.  இவை இரண்டினையும் கூட்டிபாருங்கள் 9 வரும். இதுதான் அம்மாவின் lucky எண்ணாம்.

பச்சை நிறத்திற்கும் - மெருன் நிறத்திற்கும் சரி சமமான முக்கியத்துவம் மேடைகளிலும் விழா பந்தலிலும் காண முடிந்தது.

பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சி 30 நிமிடங்கள் வரை இருந்தது. அந்த இடைவெளியில்தான் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு அமைச்சர் என்ற விதத்தினில் அமைச்சர்கள் ஆசிரியர்களை நோக்கி வந்து ஒவ்வொரு வரிசைக்கும் ஒருவருக்கு பணிநியமன ஆணைகளை வழங்குவது போல் வழங்கி புகைபடம் எடுத்துக்கொண்டனர்.

அதனுடன் விழா முடிவடைந்தது இறுதியாக திருமதி. சபிதா அவர்கள் நன்றி உரை வழங்கி 2 மணி அளவில் விழாவினை முடித்து வைத்தனர்.

மதிய உணவு 3 மணியை கடந்து அலைச்சலுக்கு பிறகே அனைவரின் கைக்கு கிடைத்து வயிற்றை பாதியாக நிரப்பியது.

அதன் பின்னர் 1 மணி நேரத்திற்குள் அனைவரும் தங்கள் ஊர் பேருந்தில் ஏறி தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று விடலாம் என்று மேடையில் அறிவிக்கப்பட்டது. ஆனால் நடந்ததோ வேறு. இரவு 10 மணி வரை இந்த பணி நடைபெற்றது.

மதியம் 3 மணிக்கு தொடங்கிய இந்த பணி இரவு 10 மணிக்கு முடிந்து என்றால் இவ்வளவு நேரமும் விழாவில் கலந்து கொண்டவர்கள் காவல்துறையால் ஏமாற்றப்பட்டனர் என்றுதான் வைத்துக்கொள்ள வேண்டும். காரணம் 1 மணிநேரத்தில் அனைவரையும் பேருந்தில் அமர்த்தி விடுவோம் என்ற அவர்களின் பொய்யான வாக்குறுதியை நம்பி மணிக்கணக்காக காத்திருந்தோர் ஏராளம்.

பிறகு ஒருசிலருக்கு இரவு உணவு பார்சல் கிடைத்தது பலருக்கு கிடைக்கவில்லை தென் மாவட்டம் தொடங்கி ஒவ்வொரு மாவட்ட பேருந்துகளாக வரவழைக்கப்பட்டு ஆசிரியர்கள் ஏற்றி தங்கள் சொந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

திங்கட்கிழமை ஒவ்வொரு மாவட்ட DEO அலுவலகங்களை தொடர்புகொண்டு பணியில் அமர ஆசிரியர்களுக்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அன்றைய தினமே SR பதிவு தொடங்கப்படும்.

இதற்காக ஆசிரியர்கள் பெற வேண்டியது ஒரு Medical fitness சான்றிதழ்.


இதனுடன் தங்கள் அசல் சான்றிதழ்களுடன் கூட இரண்டு செட் சான்றொப்பமிடப்பட்ட நகல்களுடன் சென்று SR தொடங்கி பணியில் சேர்ந்து கொள்ளலாம்.


புகைப்பட தொகுப்பினை காண இங்கே கிளிக் செய்யவும் 

Tuesday, December 11, 2012

PG TRB SELECTION LIST PUBLISHED - அவர்களும் 13 ஆம் தேதி CM விழாவில் கலந்து கொள்வார்கள்!

வரும் டிசம்பர் மாதம் 13 ஆம் தேதி நடைபெற உள்ள  CM விழாவில் PG TRB ல் தேர்வானவர்களும் கலந்துகொள்வார்கள் என்று தெரிகிறது. துரிதகதியில் இன்று இரவு இவர்களுக்கான selection list வெளியிடப்பட்டுள்ளது.
இவர்களுக்கான பணிநியமன ஆணைகளை வழங்கிய பின்னர் இவர்களுக்கான கலந்தாய்வு பிறகு நடத்தப்படுமா? அல்லது 12 ஆம் தேதி இவர்களுக்கான கலந்தாய்வு அதிரடியாக நடத்தப்படுமா என்ற தகவல்கள் இன்னும் தெரியவில்லை.
ஆனால் 13 ஆம் தேதி விழாவில் இவர்களையும் இணைத்து 20000 க்கும் அதிகமான ஆசிரியர்களை ஒரே நேரத்தில் நியமனம் செய்து பெருமை கொள்ள போகிறது தமிழக அரசு

கீழே கொடுக்கப்பட்டுள்ள selection list ல் Botany பிரிவிற்கு மட்டும் தேர்வு முடிவுகள் உயர்நீதிமன்றத்தின் இடைகால தடை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
 பட்டியலில் இடம்பெற்றுள்ள தேர்வர்கள், "ஹால் டிக்கெட்'டுடன், சென்னைக்கு வரும் வகையில், தயாராக புறப்பட்டு, அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களை, இன்று சந்திக்க வேண்டும் என, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.  தேர்ந்தெடுக்கப்பட்ட முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் மட்டும் விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள முகவரி சார்ந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்திற்கு 12.12.12 காலை 8.00 மணிக்குள் சென்று மற்ற தகவல்களை பெறுமாறு கேட்டுக்கொள்ளபடுகிறார்கள்.        தேர்வு பெற்றுள்ள முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் தங்களது தேர்வுக்கூட அனுமதிச் சீட்டு மற்றும் அதன் நகல், 2 புகைப்பட நகலுடன் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தை புதன்கிழமை காலை 10 மணிக்கு அணுக வேண்டும். அவ்வாறு வரும்போதே அவர்கள் சென்னைக்குப் புறப்படும் வகையில் தயாராக வர வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை கேட்டுக் கொண்டுள்ளது.  .

TET தேர்வில் வெற்றி பெற்றோர் சென்னை விழாவில் கலந்து கொள்ள தங்கள் Hallticket ஐ கொண்டு செல்வது கட்டாயம்.

ஆசிரியராக பணியிடம் பெற்றவர்கள்வெள்ளிக்கிழமையே (14-12-2012) பணியிடங்களில் பணியமர உத்தரவு

ஆசிரியராக பணியிடங்களை பெற்ற 18000 ஆசிரியர்களும் தங்கள் பணிநியமன ஆணைகளை வரும் 13 ஆம் தேதி சென்னை YMCA மைதானத்தில் நடைபெறும் விழாவில் பெற்றுக்கொண்டு 14 ஆம் தேதி வெள்ளிக் கிழமையே தங்கள் பணியிடங்களில் பணிகளில் அமர உத்தரவிடப்பட்டுள்ளது.

இன்னும் 10 ஆயிரம் இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் காலி... அடுத்த TET இல் வெற்றி பெறுவோருக்கு அருமையான வாய்ப்பு.

இந்த TET தேர்வில் இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் முதலில் 5800 என்றே காட்டப்பட்டன.

பிறகு அது 8500 ஆக இருந்து - முடிவாக அனைவருக்கும் பணிநியமனம் செய்யப்பட்டனர்.

ஆனால்  கலந்தாய்வில் வெளியிடப்பட்டுள்ள பணியிடங்களை பார்க்கும் போது ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தது 750 பணியிடங்களாவது காலியாக இருப்பதாகவே தோன்றியது.

எனவே முழுவதுமாக 20 ஆயிரத்திற்கும் அதிகமான இடைநிலை ஆசிரியர் காலி பணியிடங்கள் இந்த முறை வெளியிடப்பட்டுள்ளன.

இதில் பாதிக்கு பாதி.. அதாவது 10 ஆயிரம் பணியிடங்கள் மட்டுமே இந்த TET தேர்வில் நிரப்பப்பட்டுள்ளன. எனவே அடுத்த ஆசிரியர் தகுதித் தேர்வினை எழுதி வெற்றி பெறுவோருக்கு அருமையான வேலைவாய்ப்பு நிலை உருவாகி உள்ளது.

மேலும் 1:30 என்ற ஆசிரியர் மாணவர் விகிதத்தினால் இத்தகைய ஆசிரியர் பணிநியமன காலி இடங்கள் உருவாகி உள்ளன. எனவே இதனை கருத்தில் கொண்டு இந்த TNTET தேர்வினில் வெற்றி பெற முடியாதவர்கள் அடுத்த TET தேர்வில் தேர்ச்சி அடைந்து பணியிடங்களை பெற்று கொள்ளுமாறு இந்த வலைபூ மூலம் உங்களை நான் கேட்டுக் கொள்கிறேன்.

அதே போல பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும் பாதிக்கு பாதி காலியாக உள்ளன. அதனை உணர்ந்து இந்த 4 மாதத்தில் கடுமையாக உழைத்தால் ஒரு ஆசிரியாகும் உங்கள் கனவுகளை அடைந்து விடலாம் என்பது திண்ணம். 

Monday, December 10, 2012

PG TRB - விரைவில் பணிநியமனத்தினை எதிர்பார்க்கலாம்.


ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு நடந்து முடிந்து உயர்நீதிமன்ற வழக்கால் முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. தற்பொழுது வழக்கு முடியும் தருவாயில் இருப்பதால் முதுகலை ஆசிரியர் தேர்வின் இறுதி முடிவுகள் தயார் செய்யப்பட்டு

வெளியிடும் நிலையில் இருப்பதாகவும் ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனவே இது குறித்து முறையான அறிவிப்பு விரைவில் வரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Saturday, December 8, 2012

தீர்க்கமான ஆன்லைன் கலந்தாய்வு வழிமுறைகள் - சிறப்பு செய்தி by, Mr.S.Murugavel M.sc.,B.Ed

முக்கிய அறிவிப்பு : இடைநிலை ஆசிரியர்கள் பணிநாடு னர்களின் வேலைவாய்ப்பக பதிவிற்கு பதிலாக, ஆசிரியர் தேர்வு வாரியத்தால் அளிக்கப்பட்ட வீட்டு முகவரி அடிப்படையில் கலந்தாய்வில் கலந்துகொள்ள இயக்குநர் உத்தரவு. 

அறிவிப்பினை காண இங்கே சொடுக்கவும் 


புதிய பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமனம்: ஆன்-லைன் கலந்தாய்வு
ஆசிரியர் தேர்வு வாரியத்தால் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 8,627 பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஞாயிறு மற்றும் திங்கள்கிழமை அன்று ஆன்-லைன் மூலம் பணி நியமன கலந்தாய்வு நடைபெறும் என்று பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் கே.தேவராஜன் அறிவித்துள்ளார்.
அதேபோல், புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 9,600 இடைநிலை ஆசிரியர்களுக்கு வரும் செவ்வாய்க்கிழமை (டிச.11) ஆன்-லைன் கலந்தாய்வு நடத்தப்படும் என்று தொடக்கக் கல்வி இயக்குநர் வி.சி.ராமேஸ்வரமுருகன் தெரிவித்தார்.
புதிதாகத் தேர்வுசெய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் தாங்கள் அளித்துள்ள வீட்டு முகவரியைச் சார்ந்த மாவட்டத்தில் நடைபெறும் ஆன்-லைன் கலந்தாய்வில் பங்கேற்க வேண்டும்.
அந்தந்த மாவட்டத்துக்குள் நியமனம் கோருபவர்கள் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12 மணிக்கு கலந்தாய்வில் பங்கேற்க வேண்டும். அந்தந்த மாவட்டங்களில் காலிப்பணியிடங்கள் இல்லாததால் நியமன ஆணை பெற இயலாதவர்கள் மற்றும் பிற மாவட்டத்திற்கு பணி நியமனம் கோருபவர்கள் திங்கள்கிழமை காலை 8 மணிக்கு ஆன்-லைன் கலந்தாய்வில் பங்கேற்க வேண்டும் என தேவராஜன் அறிவித்துள்ளார்.
15 ஆயிரம் காலியிடங்கள்: அரசு மேல்நிலை, உயர் நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் புதியபட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமனம் கோரலாம். காலியிட விவரங்களில் அந்தந்த மாவட்டங்களில் கலந்தாய்வு நடைபெறும் இடங்களில் ஒட்டப்பட்டிருக்கும்.
பணியிடங்களைத் தேர்வு செய்த பிறகு, அவர்களுக்கான பணி நியமன ஆணைகள் முதல்வர் ஜெயலலிதா தலைமையில் சென்னையில் டிசம்பர் 13-ம் தேதி நடைபெறும் விழாவில் வழங்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
இடைநிலை ஆசிரியர்களுக்கு...
ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்டுள்ள 9,600 இடைநிலை ஆசிரியர்களுக்கு ஆன்-லைன் கலந்தாய்வு செவ்வாய்க்கிழமை நடத்தப்படுகிறது.
ஒவ்வொரு மாவட்டத்திலும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான ஆன்-லைன் கலந்தாய்வு நடைபெறும் இடங்களிலேயே இடைநிலை ஆசிரியர்களுக்கும் ஆன்-லைன் கலந்தாய்வு நடத்தப்படும் என்று தொடக்கக் கல்வித் துறை இயக்குநர் வி.சி.ராமேஸ்வரமுருகன் தெரிவித்தார்.
இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் மிகவும் குறைவு என்பதால் இந்தக் கலந்தாய்வு விரைவாக முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் கலந்தாய்வில் பணியிடங்களைத் தேர்ந்தெடுக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கும் 13-ம் தேதி விழாவில்தான் பணி நியமன ஆணைகள் வழங்கப்படுகின்றன.

http://jobs-trb.blogspot.in/2012/12/blog-post_8.html#links 

 நன்றி. http://www.teachertn.com/2012/12/tet-appointment-counselling-preparations.html

 கலந்தாய்வு நடைபெற உள்ள இடங்கள்...

சென்னை: MCC மேல்நிலைப்பள்ளி, சேத்துப்பட்டு

கோவை: பாரதி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, RSS புரம்

திண்டுக்கல் : OUR Lady மேல்நிலைப்பள்ளி, மதுரை ரோடு

ஈரோடு : வேளாளர் கலைக்கல்லூரி


காஞ்சிபுரம்: Dr. V.S. ஸ்ரீநிவாசன் நகராட்சி மேல்நிலைப்பள்ளி

கன்னியாகுமாரி : SLP மேல்நிலைப்பள்ளி

கரூர் : பசுபதி ஈஸ்வர நகரமன்ற பெண்கள் மேல்நிலைப்பள்ளி

கிருஷ்ணகிரி : அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி

மதுரை: இளங்கோ நகராட்சி மேல்நிலைப்பள்ளி, செனாய் நகர்

நாகப்பட்டினம் : கிரசன்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, நாகூர்

நாமக்கல் : தெற்கு அரசு மேல்நிலைப்பள்ளி

பெரம்பலூர் : தனலட்சுமி ஸ்ரீனிவாசன் மேல்நிலைப்பள்ளி

ராமநாதபுரம் :சையத்தம்மாள் மேல்நிலைப்பள்ளி

சேலம் : சிறுமலர் மேல்நிலைப்பள்ளி, நான்கு ரோடு

திருவாரூர் : கஸ்தூரி பாய் காந்தி மேட்ரிக் மேல்நிலைப்பள்ளி

திருவள்ளூர் : ஸ்ரீ லட்சுமி மேல்நிலைப்பள்ளி

திருப்பூர் : ஜெய்வாபாய் மகளிர் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி

திருச்சி : அரசு சையத்முதுசா மேல்நிலைப்பள்ளி

திருநெல்வேலி : சேப்டர் மேல்நிலைப்பள்ளி

விருதுநகர் : KVS மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி

அரியலூர் : அரசு மேல்நிலைப்பள்ளி

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் கலந்தாய்வு நடைபெறும் மாவட்டங்கள் :
(கீழ்காணும் மாவட்டங்களுக்கும் வேறு கலந்தாய்வு இடங்கள்
அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது)

கடலூர், தர்மபுரி,புதுக்கோட்டை , ராமநாதபுரம், சிவகங்கை , தஞ்சை,
நீலகிரி, தேனி , திருவண்ணாமலை , தூத்துக்குடி , வேலூர் , விழுப்புரம் 

நன்றி  http://www.tamilagaasiriyar.com/2012/12/blog-post_3198.html

தொடக்க கல்வி இயக்குநரின் செயல்முறை கடிதம் காண இங்கே சொடுக்கவும் 



TRB - TET - ONLINE கலந்தாய்வு எந்த மாவட்டத்தில் கலந்துக்கொள்வது ?

பட்டதாரி ஆசிரியர்கள் :

பட்டதாரி ஆசிரியர்களை பொறுத்தவரை TET தேர்விற்கு நீங்கள் அளித்த வீட்டு முகவரியே (Communication Address) உங்களுடைய முகவரியும் மாவட்டமும் ஆகும். அதாவது உங்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்ற மாவட்டமே உங்கள் மாவட்டமாகும். அந்த மாவட்ட கலந்தாய்வில் தான் தாங்கள் கலந்து கொள்ளவேண்டும். உங்கள் வேலை வாய்ப்பு அலுவலக பதிவு மாவட்டத்தை பொருட்படுத்த தேவையில்லை.

இடைநிலை ஆசிரியர்கள்:

முக்கிய அறிவிப்பு : இடைநிலை ஆசிரியர்கள் பணிநாடு னர்களின் வேலைவாய்ப்பக பதிவிற்கு பதிலாக, ஆசிரியர் தேர்வு வாரியத்தால் அளிக்கப்பட்ட வீட்டு முகவரி அடிப்படையில் கலந்தாய்வில் கலந்துகொள்ள இயக்குநர் உத்தரவு.

 

  வீட்டு கதவை தட்டி ஆசிரியர் வேலைக்குஅழைப்பு : 18 ஆயிரம் ஆசிரியர் நியமனத்தில் ருசிகரம்

விழா நேரம் மாற்றம் : 
சென்னை, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில், 13ம் தேதி, மாலை, 4:00 மணிக்கு விழா நடக்கும் என, முதலில் தெரிவிக்கப்பட்டது. 18 ஆயிரம் ஆசிரியர்கள், அவர்களின் குடும்பத்தினர், இலவச திட்டங்களைப் பெறவரும் மாணவ, மாணவியர், பெற்றோர் என, 50 ஆயிரம் பேர் வரை, விழாவிற்கு வருவர் என, எதிர்பார்க்கப்படுகிறது.
மாலையில் விழா நடத்தினால், அனைவரும், வீட்டிற்கு திரும்பிச் செல்வதில் பிரச்னைஏற்படும் என, அதிகாரிகள் கருதினர். இதனால்,பகல், 12:00 மணிக்கு, விழா மாற்றப்பட்டதாகத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
டி.இ.டி., தேர்வு முடிவு வெளியான ஒரு வாரத்தில், 13ம் தேதி, பணி நியமன உத்தரவுகள் வழங்கப்பட இருப்பதால், கலந்தாய்வு குறித்த தகவல்களை, பல்வேறு வகைகளில் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர். பல மாவட்டங்களில், ஆசிரியர் வேலைக்கு தேர்வு பெற்றவர்களின் வீடுகளுக்கு சென்று,..
பணி நியமன கலந்தாய்வு அழைப்பு கடிதங்களை வழங்கினர். இதை சற்றும் எதிர்பாராமல், தேர்வு பெற்றோர் மகிழ்ச்சியில் திக்குமுக்காடினர்.டி.இ.டி., தேர்வு மூலம், 18 ஆயிரம் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கான முடிவு, 4ம் தேதி வெளியிட்ட நிலையில், ஒரே வாரத்தில், 13ம் தேதி, பணி நியமனம் செய்ய, தமிழக அரசு உத்தரவிட்டது. எப்போதும் இல்லாத வகையில், ஒரே நேரத்தில், அதிக பணியிடங்கள் நிரப்பப்படுவது இதுவே முதல் முறை.
கலந்தாய்வு விவரம் : குறுகிய காலத்தில், பணி நியமனம் செய்ய உத்தரவிட்டதால், அதிகாரிகள் மின்னல் வேகத்தில் செயல்பட்டு, "ஆன்-லைன்' மூலம், பணி நியமன கலந்தாய்வை நடத்த, ஏற்பாடு செய்துள்ளனர். பள்ளி கல்வித் துறைக்கு ஒதுக்கீடு பெற்றுள்ள, 8,627 பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நியமன கலந்தாய்வு இன்றும், நாளையும் நடக்கிறது.
இன்று, மாவட்டத்திற்குள், பணி நியமனத்திற்கான கலந்தாய்வு நடக்கிறது. 32மாவட்டங்களிலும், தேர்வு செய்யப்பட்ட மையங்களில் கலந்தாய்வு நடக்கிறது. நாளை, மாவட்டத்தில் இருந்து, வேறு மாவட்டங்களில் பணி நியமனம் பெறுவதற்கான கலந்தாய்வு நடக்கிறது. கலந்தாய்வு நடக்கும் இடங்கள் இறுதி செய்யப்பட்டு, மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டு உள்ளன.
இடைநிலை ஆசிரியர் : இதேபோல், தொடக்க கல்வித் துறையில், 9,000 இடைநிலை ஆசிரியர்களுக்கான பணி நியமன கலந்தாய்வு, 11ம் தேதி நடக்கிறது. பள்ளி கல்வித் துறை சார்பில் நடக்கும் கலந்தாய்வு இடங்களிலேயே, இடைநிலை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வும் நடக்கிறது. காலையில், மாவட்டத்திற்குள் பணி நியமனத்திற்கான கலந்தாய்வும், பிற்பகலில், வேறு மாவட்டங்களுக்கான கலந்தாய்வும் நடக்கிறது.
" டோர் டெலிவரி' : கலந்தாய்வு நடக்கும் விவரங்களை, ஆசிரியர் வேலைக்கு தேர்வாகியுள்ளவர்களுக்கு தெரிவிப்பதற்கு, பல்வேறு முறைகளை கல்வித் துறை அதிகாரிகள் கையாண்டு வருகின்றனர். நாளிதழ்கள், "டிவி' சேனல்கள் மூலம், கலந்தாய்வு விவரங்களை தெரிவித்ததுடன், தேர்வர்களின் அலைபேசி எண்களை பயன்படுத்தி, நேரடியாக அவர்களுக்கு தகவல்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில், பணிபுரியும் ஆசிரியர்களை, புதிதாக தேர்வு பெற்றவர்களின் வீடுகளுக்கு அனுப்பி, கலந்தாய்வு கடிதங்களை நேரடியாக வழங்கவும்ஏற்பாடு செய்துள்ளனர். அதன்படி, நேற்று, ஆசிரியர்கள் பல பகுதிகளுக்குச் சென்று, தேர்வு பெற்றவர்களின் வீட்டு கதவை தட்டி,"வாழ்த்துக்கள் மேடம்; வாழ்த்துக்கள் சார்' என, தெரிவித்து, கலந்தாய்வு கடிதங்களை வழங்கினர். திடீரென ஆசிரியர்கள், வீடுகளுக்கு வந்து கலந்தாய்வு அழைப்பு கடிதங்களை வழங்கியது, தேர்வு பெற்றவர்களை, மகிழ்ச்சியில் திக்குமுக்காட வைத்துள்ளது.

அசத்தலான வேகமும் அதில் உள்ள அபாயங்களும் - ஆசிரியர் பணி நியமன கலந்தாய்வு பற்றிய ஒரு சிறிய அலசல்


ஆசிரியர் மறுதகுதித் தேர்வின் மூலம் தேர்வான 18000 ஆசிரியர்களுக்கும் வரும் டிசம்பர் 13 ஆம் தேதி சென்னை YMCA மைதானத்தில் பணி நியமன ஆணைகளை வழங்க முதல்வர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.

ஆனால் இதற்கான கலந்தாய்வு டிசம்பர் 07 ஆம் தேதி அதிகாரிகளால் முடிவெடுக்கப்பட்டு அன்று மாலை வெளியிடப்பட்டுள்ளது.

டிசம்பர் 08 ஆம் தேதி பல ஊடகங்களில் இது பற்றிய செய்திகள் வெளிவராத சூழலில் ஜெயா plus தொலைக்காட்சியில் மட்டும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு 09 மற்றும் 10 ஆம் தேதிகளில் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.

மிக குறுகிய காலத்தில் இது போன்ற முடிவுகளால் கலந்தாய்வில் கலந்து கொள்ள வேண்டிவர்களுக்கு போதிய செய்தி சென்றடைவதில் சிக்கல் எழுந்துள்ளது.

மேலும் Call Letter கடித வடிவில் அனுப்பப்பட்ட பின்னரே கலந்தாய்வு நடத்தப்பட வேண்டும் என்ற வழக்கமான அரசு செயல்முறைகளுக்கு மாறாக தற்போது கலந்தாய்விற்கு அழைக்கப்பட்டுள்ளதால் எந்த ஆவணத்துடன் சென்று பணி நியமன கலந்தாய்வில் கலந்துகொள்வது என்று பலருக்கு சந்தேகங்கள் எழுந்துள்ளன.

இப்படி அதிரடியான முடிவுகளை மேற்கொள்ளும் போது பெரிய அளவிலான ஊடக முறையில் செய்திகளை பரப்ப வேண்டும் (Large Level Of Media Broadcasting).

முழுமையான தகவலை உரியவருக்கு அளிக்க வேண்டும்.

என்பவற்றினை பின்பற்றினால் எதிர்காலத்தில் நடக்கவிருக்கும் குழப்பங்களை முன்கூட்டியே சமாளிக்கலாம்.

நாளை நடக்கவிருக்கும் கலந்தாய்வில் அனைவரும் கலந்துகொள்ளவேண்டும் என்பதுதான் இப்போது விடுக்கப்பட்டுள்ள சவால்.

இதனை உணர்ந்து

கலந்தாய்வில் கலந்து கொள்பவர்கள் அவர்களவர்கள் மாவட்ட CEO அலுவலகங்களுக்கு தங்களின் original October TET Hallticket

இரண்டு மூன்று Passport photo

 மற்றும் சான்றிதழ்களுடன்  சென்று கலந்தாய்வில் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 

Friday, December 7, 2012

13 ஆம் தேதி ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற அனைவருக்கும் பணிநியமன ஆணைகள் சென்னையில் வழங்க நடவடிக்கை தீவிரம்.

18 ஆயிரம் ஆசிரியர்களுக்கு, 13ல் பணி நியமன உத்தரவு
பள்ளிக்கல்வி, தொடக்க கல்வித்துறையில், 18 ஆயிரம் ஆசிரியர்களுக்கு, பணி நியமனம், மாணவர்களுக்கு இலவச புத்தகப் பை, இலவச காலணிகள், கலர் பென்சில்கள், கணித உபகரணப்பெட்டி ஆகியவை வழங்கும் விழா, 13ம் தேதி, சென்னை, நந்தனத்தில் உள்ள, ஒய்.எம்.சி.ஏ., திடலில் நடக்கிறது.

முதல்வர் ஜெயலலிதா பங்கேற்று, புதிய ஆசிரியர்களுக்கு, பணி நியமன உத்தரவு மற்றும் மாணவர்களுக்கு, நலத்திட்டங்களை வழங்க இருப்பதாக, கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

ஜூலை மற்றும் அக்டோபரில் நடந்த, டி.இ.டி., தேர்வில், இறுதியாக தேர்வு செய்யப்பட்ட, 18 ஆயிரம் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் பட்டியலை, 5ம் தேதி, டி.ஆர்.பி., வெளியிட்டது. இவர்களுக்கு பணி நியமனம் வழங்கும் நிகழ்ச்சியை, பிரம்மாண்டமாக நடத்த, தமிழக அரசு முடிவு எடுத்தது.

இந்நிகழ்ச்சியை தள்ளிப்போடாமல், தேர்வு பெற்றவர்களுக்கு, சூட்டோடு சூடாக, பணி நியமன உத்தரவுகளை வழங்கவும், தமிழக அரசு உத்தரவிட்டது. இதனால், பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள், விழாவை நடத்த, பம்பரமாக சுழன்று வருகின்றனர்.

ஒய்.எம்.சி.ஏ., திடலில் விழா ஏற்பாடுகள் : சென்னை, நந்தனம், ஒய்.எம்.சி.ஏ., திடலில், 13ம் தேதி மாலை, 4:00 மணிக்கு, பள்ளிக் கல்வித்துறை சார்பில், விமரிசையாக விழா நடக்கும் எனவும், இதில், முதல்வர் ஜெயலலிதா பங்கேற்று, ஆசிரியர் பணி நியமன உத்தரவுகளையும், மாணவர்களுக்கான நலத்திட்டங்களை துவங்கி வைப்பார் எனவும், துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

விழா நடக்கும் இடத்தை, பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள், நேற்று பார்வையிட்டனர். இந்த இடத்தில், விழா நடத்துவது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், ஐந்து நாட்களுக்குள், தேவையான ஏற்பாடுகள் செய்து முடிக்கப்படும் என்றும், துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

பள்ளிக் கல்வித்துறையில் நடக்கும் பணி நியமனங்கள், ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வுகள், "ஆன்-லைன்" முறையில் நடந்து வருகின்றன. எனவே, 18 ஆயிரம் பேரும், இதே முறையில், பணி நியனம் செய்ய, துறை திட்டமிட்டுள்ளது. 

விழாவிற்கு முன்நாளில், கலந்தாய்வு நடத்தி, சில பேரை தேர்வு செய்யவும், தேர்வு செய்யப்படுபவர்கள், முதல்வர் கையால், பணி நியமன உத்தரவுகளை பெறவும், துறை அதிகாரிகள் ஏற்பாடு செய்து வருகின்றனர்.

நன்றி -  S.Murugavel M.sc.,B.Ed சார்.


இது தொடர்பான அரசாணை காண..

நன்றி http://www.tnkalvi.com/ and https://www.facebook.com/satlovemail சதிஸ் தனராஜ் சார்..

other links