tet books

time


follow me on fb

Tuesday, January 1, 2013

பணி நியமன ஆணை கிடைத்தும் பணி கிடைக்காத PG ஆசிரியர்கள்


நியமன உத்தரவு பெற்ற ஆசிரியர்கள் நீக்கம்: டி.ஆர்.பி.யிடம் முறையீடு- Dinamalar

முதல்வர் ஜெயலலிதா பங்கேற்ற விழாவில், பணி நியமன உத்தரவு பெற்ற முதுகலை ஆசிரியர்களில், பலர் நீக்கம் செய்யப்பட்டனர். இவர்கள், நேற்று நடந்த பணி நியமன கலந்தாய்வுக்கு அழைக்கப்படாததால், டி.ஆர்.பி., அலுவலகத்தில் குவிந்து, அதிகாரிகளிடம் முறையிட்டனர்.
பள்ளி கல்வித்துறையில், 2,895 முதுகலை ஆசிரியர்களை நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு, கடந்த மாதம், 13ம் தேதி, சென்னையில் முதல்வர் பங்கேற்ற விழாவில், 2,308 பேருக்கு, பணி நியமன உத்தரவுகள் வழங்கப்பட்டன.
இந்நிலையில், தகுதியற்ற பலர், இறுதி தேர்வுப் பட்டியலில் இடம்பெற்றதாக வந்த தகவலை அடுத்து, பட்டியலை தீவிரமாக ஆய்வு செய்த அதிகாரிகள், தகுதியற்றவர்களை, தேர்வுப் பட்டியலில் இருந்து நீக்கினர்.
எத்தனை பேர், தேர்வுப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனர் என்ற விவரத்தை, டி.ஆர்.பி., அதிகாரப்பூர்வமாக வெளியிடாத நிலையில், முதுகலை ஆசிரியர்களுக்கானபணி நியமன கலந்தாய்வு, 32 மாவட்டங்களிலும், நேற்று நடந்தது. தகுதி வாய்ந்தவர்களுக்கு மட்டும், கலந்தாய்வில் பங்கேற்பதற்கு, முன்கூட்டியே, மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் மூலம், அழைப்பு விடுக்கப்பட்டது. 
அதன்படி, அவர்கள், நேற்று நடந்த கலந்தாய்வில் பங்கேற்று, பலர் பணி நியமன உத்தரவுகளை பெற்றனர். இறுதி தேர்வுப் பட்டியலில் இடம்பெற்றும், கலந்தாய்வுக்கு அழைப்பு வராத தேர்வர்கள், நேற்று டி.ஆர்.பி., அலுவலகத்தில் குவிந்தனர். மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து, 100க்கும் மேற்பட்டோர் வந்திருந்தனர். அவர்கள், டி.ஆர்.பி., அலுவலர்களை சந்தித்து, முறையிட்டனர். 
அலுவலர்கள், சரியான பதிலை அளிக்கவில்லை என்றும், எதையாவது கூறி மழுப்புகின்றனர் என்றும், தேர்வர்கள் புகார் கூறினர். தாவரவியல் பிரிவில், ஒட்டுமொத்தமாக ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படாததால், அந்த பிரிவைச் சேர்ந்த தேர்வர்களும், அதிகளவில் வந்தனர்.
அவர்கள் கூறியதாவது: தாவரவியலில், 204 இடங்கள் உள்ளன. ஒரு இடம்கூட நிரப்பவில்லை. வழக்கு நிலுவையில் இருப்பதால், நிரப்பப்படவில்லை என்றும், வழக்கு முடிந்ததும் நிரப்பப்படும் என்றும் முதலில் டி.ஆர்.பி., அதிகாரிகள் கூறினர். அதிகாரிகளைச் சந்தித்து, வழக்கு குறித்த விவரங்களை கேட்டு, வழக்கு எண் விவரத்தை பதிவு செய்து, இணையதளத்தில் பார்த்தபோது, வழக்கு முடிந்துவிட்ட விவரம் தெரியவந்தது.
இதைப்பற்றி அதிகாரிகளிடம் கேட்டதற்கு, "வழக்கு முடிந்துவிட்டது. ஆனால், இந்த பிரிவைச் சேர்ந்தவர்களின் சான்றிதழ்களை சரிபார்த்தபின், இறுதிதேர்வு பட்டியலை வெளியிடலாம் என, கோர்ட் தெரிவித்துள்ளது. அதன்படி, சான்றிதழ்களை சரிபார்த்தபின், தேர்வுப் பட்டியலை வெளியிடுவோம்" என, தெரிவித்தனர்.
கலந்தாய்வுக்கு நிராகரிக்கப்பட்ட தேர்வர்கள் குறித்து, டி.ஆர்.பி., வட்டாரத்தினர் கூறியதாவது: பல லட்சம் பேருக்கு தேர்வு நடத்தி, 6,000த்திற்கும் மேற்பட்டோரின் சான்றிதழ்களை சரிபார்த்து, தேர்வு முடிவை வெளியிடுவது என்பது, சாதாரண வேலை கிடையாது. 
மாவட்டங்களில் நடந்த சான்றிதழ் சரிபார்ப்புகளில், ஒரு சில இடங்களில், அதிகாரிகள் சரியாக கவனிக்காததால், சில தவறுகள் ஏற்பட்டன. இந்த தவறுகளை, நாங்கள் அப்படியே அனுமதிக்கவில்லை. தகுதியானதேர்வர்களின் பட்டியலை மட்டும் தான், கல்வித்துறையிடம் ஒப்படைத்தோம். அதில் இடம்பெற்றவர்களுக்கு, கலந்தாய்வு நடத்தப்பட்டுள்ளது. 
காரணம் இல்லாமல், எந்த ஒரு தேர்வரையும், நாங்கள் நிராகரிக்கவில்லை. தேர்வுப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட தேர்வர்களின் பெயர், நீக்கப்பட்டதற்கான காரணங்களுடன், இணையதளத்தில் வெளியிடுவோம். அதேபோல், இன சுழற்சி வாரியான, "கட்-ஆப்&' மதிப்பெண்கள் விவரம், பாட வாரியாக தேர்வு செய்யப்பட்டவர்களின் விவரம் உள்ளிட்ட அனைத்து தகவல்களையும், இணையதளத்தில் விரைவில் வெளியிடுவோம். 
தமிழ் வழியில் படித்தவர்களுக்கான இடஒதுக்கீடு, தாவரவியல் பாடத்திற்கான தேர்வுப் பட்டியல் ஆகியவற்றையும் வெளியிடுவோம். இவ்வாறு, டி.ஆர்.பி., வட்டாரத்தினர் தெரிவித்தனர். 

0 தங்களின் கருத்து பதிவிற்கு இங்கே சொடுக்கவும்...:

Post a Comment

தங்களின் கருத்துக்கள் வரவேற்க படுகின்றன

other links