tet books

time


follow me on fb

Thursday, May 30, 2013

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகிவிட்டன

http://tnresults.nic.in/gdslplus/gdslplus.htm



498 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ள  9 மாணவிகள் விபரம் வருமாறு:
1) அனுஷா கொங்குவோளாளர் பள்ளி, பெருந்துறை
2) தீப்தி பஸ்கோஸ் மெட்ரிக் பள்ளி, மதுரை
3) காயத்ரி மான்ட் போர்ட் மெட்ரிக் பள்ளி, மஞ்சம்பட்டி, திருச்சி
4) மர்சியா ஷெரீன் மான்ட் போர்ட் மெட்ரிக் பள்ளி, மஞ்சம்பட்டி, திருச்சி
5)பொன் சிவசங்கரி இ.எச்.கே.என். பள்ளி, பாளையம், ஈரோடு
6) சாருமதி சிருஷ்டி மெட்ரிக் பள்ளி, பிரம்மபுரம், திருப்பத்தூர்
7) சோனியா எஸ்.ஜே.எஸ். ஜூப் மெட்ரிக் பள்ளி, திருநெல்வேலி
8. ஸ்ரீதுர்கா வீனஸ் மெட்ரிக் பள்ளி, சிதம்பரம்

9) வினுஷா ஆக்சிலியம் பள்ளி, வேலூர் 


 52 பேர் 497/500 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்திலேயே 2வது இடம் பிடித்துள்ளனர். 

136 பேர் 496/500 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்திலேயே 3வது இடம் பிடித்துள்ளனர்.

 பத்தாம் வகுப்பு தேர்வுகள் கடந்த மார்ச் 27ம் தேதி முதல் ஏப்ரல் 12ம் தேதி வரை நடந்தது. 10 லட்சத்து 69 ஆயிரத்து 500 பேர் எழுதினர். தனி தேர்வர்களாக 70 ஆயிரத்து 233 பேர் பங்கேற்றனர். தேர்வு முடிவுகள் இன்று காலை 9.15 மணிக்கு அரசு தேர்வுகள் இயக்ககத்தில் வெளியானது.



மதிப்பெண் பட்டியல்கள் ஜூன் 20ம் தேதி அந்தந்த பள்ளிகளில் வழங்கப்படும். தனி தேர்வர்கள் தேர்வு எழுதிய மையங்களில் மதிப்பெண் பட்டியல்களை பெற்றுக் கொள்ளலாம். 

பத்தாம் வகுப்பு தேர்வு மதிப்பெண்கள் குறித்து மறுகூட்டல் செய்ய ஆன்லைன் முறை யில் விண்ணப்பித்து தெரிந்து கொள்ள முடியும். 

இதற்காக www.dge.tn.nic.in என்ற இணைய தளத்தை பயன்படுத்த வேண்டும். மறு கூட்டலுக்கு ஒவ்வொரு பாடத்துக்கும் தனித்தனியே விண்ணப்பிக்க வேண்டும்.

 ஜூன் 7 முதல் 10ம் தேதி வரை மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

ஆதார் அட்டையில் பிழைகள் உள்ளதா? -நீங்களே Edit செய்திடுங்கள்... ஆன்லைனில்


 http://uidai.gov.in/update-your-aadhaar-data.html

இந்தியாவில் ஒரு சிலருக்கு ஆதார் கார்டு இந்திய அரசால் வழங்கப்பட்டிருக்கிறது. அந்த கார்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் முகவரி, மொபைல் எண் அல்லது மற்ற குறிப்புகளில் ஏதாவது மாற்றம் ஏற்பட்டால், அந்த மாற்றத்தை ஆன்லைன் மூலம் அப்டேட் செய்ய முடியும்.
அதாவது மாற்றம் ஏற்பட்டிருக்கும் குறிப்புகளை ஆன்லைனில் அப்டேட் செய்யலாம். அல்லது அந்த குறிப்புகளை தபால் மூலம் அனுப்பலாம்.
ஆதார் கார்டில் உள்ள குறிப்புகளை ஆன்லைன் மூலம் எவ்வாறு மாற்றம் செய்வது?
1. ஆதார் கார்டுக்கான வெப்சைட்டுக்குள் சென்று லாகின் செய்ய வேண்டும்.
2. மாற்றம் செய்ய வேண்டிய குறிப்புகளை அந்த வெப்சைட்டில் அப்டேட் செய்ய வேண்டும்.
3. டாக்குமென்டுகளை அப்லோட் செய்ய வேண்டும்.
ஆதார் கார்டுக்கான வெப்சைட்டுக்குள் செல்வதற்கு முன் உங்களிடம் கண்டிப்பாக மொபைல் எண் இருக்க வேண்டும். ஏனெனில் வெப்சைட்டில் ரிஜிஸ்டர் செய்யும் போது அதற்கான பாஸ்வேர்ட் உங்கள் மொபைல் எண்ணுக்கு அனுப்பி வைக்கப்படும்.
இந்திய குடிமக்கள் தங்களுடைய பெயர், முகவரி, பாலினம், பிறந்த தேதி மற்றும் மொபைல் எண்கள் ஆகியவற்றை இந்த வெப்சைட்டில் அப்டேட் செய்யலாம்.
ஆன்லைனில் ஆதார் கார்டை அப்டேட் செய்ய தேவையான குறிப்புகள்
1. ஆதார் கார்டு வெப்சைட்டைப் பயன்படுத்த வேண்டும் என்றால் கண்டிப்பாக நீங்கள் மொபைல் வைத்திருக்க வேண்டும்.
2. ஆதார் கார்டு வெப்சைட்டில் சேரும் போது, அந்த வெப்சைட்டில் உங்கள் மொபைல் எண்ணைப் பதிவு செய்ய வேண்டும். பின் உங்கள் ஆதார் கார்டு எண்ணைப் பதிவு செய்ய வேண்டும். உடனே உங்கள் மொபைல் எண்ணிற்கு ஒன் டைம் பாஸ்வேர்ட் (ஒடிபி) அனுப்பி வைக்கப்படும்.
ஒருவேளை நீங்கள் மொபைல் எண்ணைப் பதிவு செய்யவில்லை என்றால், அந்த வெப்சைட்டில் ஆதார் கார்டு எண்ணைப் பதிவு செய்யவும். தற்போது மொபைல் எண்ணை பதிவு செய்ய வேண்டும். அப்போதுதான் நீங்கள் ஒடிபி பெற முடியும். ஒருவேளை மொபைல் எண்ணைத் தவறவிட்டிருந்தால், உங்கள் அப்டேட்டைத் தபால் மூலம் தான் அனுப்பி வைக்க முடியும்.
3. ஒடிபி கிடைத்தவுடன் அதை வெப்சைட்டில் பதிவு செய்ய வேண்டும்.
4. எந்தந்த குறிப்புகளையெல்லாம் அப்டேட் செய்ய விரும்புகிறீர்களோ, அவற்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
5. தேர்ந்தெடுத்த குறிப்புகளை, ஆங்கிலம் மற்றும் தாய்மொழியில் அப்டேட் செய்யவும்.
அ. அப்டேட் செய்யப்படும் குறிப்புகளுக்கு தேவையான உறுதிச் சான்றிதழ்களை இணைக்க வேண்டும் என்று வெப்சைட்டில் குறிக்கப்பட்டிருந்தால், அதற்கான சான்றிதழ்களை அப்லோட் செய்ய வேண்டும்.
ஆ. பெயர் மாற்றத்தை அப்டேட் செய்தால், பெயர் மற்றும் உங்கள் தோற்றம் ஆகியவற்றிற்கான உறுதிச் சான்றதழ் மற்றும் உங்கள் புகைப்படம் ஆகியவற்றை அப்லோட் செய்ய வேண்டும்.
இ. பிறந்த தேதியை அப்டேட் செய்யும் போது அதற்கான உறுதிச் சான்றிதழையும் அப்லேட் செய்ய வேண்டும்.
6. முகவரியை அப்டேட் செய்யும் போது, புதிய முகவரிக்கான உறுதிச் சான்றிதழை அப்லோட் செய்ய வேண்டும்.
7. தேவையான உறுதிச் சான்றிதழ்களை ஆன்லைனில் அப்லோட் செய்ய முடியவில்லை என்றால் தபால் மூலம் அனுப்பி வைக்கலாம்.

நன்றி...  One India 

Wednesday, May 29, 2013

இந்த வார வேலை வாய்ப்புகள் - மே கடைசி வாரம்











Tuesday, May 28, 2013

கோடை விடுமுறை முடிந்து தமிழக பள்ளிகளை சூன் 10 ஆம் தேதி திறக்க - உத்தரவு

தமிழகத்தில் ஏற்கனவே சூன் 3 என்று அறிவிக்கப்பட்டிருந்த பள்ளிகளை திறக்கும் தேதி தற்போது வெயிலின் தாக்கத்தால் சூன் 10 என மாற்றலாகி உள்ளது.

நேற்று புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் வெளியிட்ட அறிக்கையில் வெயில் தாக்கம் அதிகமாக இருப்பதால், புதுச்சேரியில் பள்ளிக்கூடங்கள் 10ம் தேதி திறக்கப்படும் என அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Friday, May 24, 2013

PG TRB தாவரவியல் பிரிவில் 2012 ல் நிலுவையில் உள்ள 197 பேருக்கு மே 27 ல் கலந்தாய்வு

2012 ஆம் ஆண்டு தாவரவியல் பிரிவில் PG TRB மூலம் தேர்வானவர்களுக்கு பல்வேறு சிக்கல்கள் காரணமாக பணி நியமனம் இல்லாமல் தவித்து வருகின்றனர்.

நீதிமன்ற வழக்குகளின் தீர்ப்பால் வரும் மே 27 ஆம் தேதி அந்தந்த CEO அலுவலகங்களில் கலந்தாய்வு மூலம் தேர்வு செய்யப்பட்ட 197 ஆசிரியர்களுக்கு பணிநியமனம் அளிக்க உள்ளதாக அதிகாரபூர்வ செய்திகள் வெளியாகி உள்ளன..

Thursday, May 23, 2013

12 ஆம் வகுப்பு உடனடித் தேர்வு ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் மே 27

 http://www.dge.tn.nic.in/hscprivate/welcome.htm


+2 சிறப்புத் துணைத்தேர்வு: ஜூன் 19-ல் தொடக்கம்

பிளஸ் 2 சிறப்புத் துணைத் தேர்வு ஜூன் 19 முதல் ஜூலை 1-ஆம் தேதி வரை நடைபெறும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சிப் பெறாத மாணவர்கள் ஆன்-லைன் மூலம் வியாழக்கிழமைமுதல் (மே 23) திங்கள்கிழமைவரை (மே 27) விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 9-ஆம் தேதி வெளியிடப்பட்டன. இதில் பள்ளிகளின் மூலம் தேர்வு எழுதிய 7.99 லட்சம் மாணவர்களில் 7.04 லட்சம் மாணவர்கள் தேர்ச்சிப் பெற்றனர். 95 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை.

Tuesday, May 21, 2013

TNTET 2013- அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியீடு...

கடந்த ஏப்ரல் மாதம் முதலே எதிர்பார்க்கப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்விற்கான கால அட்டவணையினையும்... அறிவிப்பினையும் TRB இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது..


அதன்படி..

Paper I - 17.08.2013 Time 10 am to 1 pm
 Paper II - 18.08.2013 Time 10 am to 1 pm

Recruitment Post = 13,000 (SGT+BT)

Application Sales Starts From 17.06.2013 to 01.07.2013
Application Cost: Rs. 50
Examination Fees: Rs. 500 
SC/ST/Disabled Fees: Rs. 250 

பாடவாரியான காலி பணியிட விவரங்களை காண இங்கே கிளிக் செய்யவும் 

 பழைய விண்ணப்பப்படிவம் மாதிரியை காண இங்கே கிளிக் செய்யவும்


 பாட வாரியான கற்றல் குறிப்புகளை பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

தகுதித்தேர்வுக்கு மொத்த மதிப்பெண் 150 ஆகும். தேர்ச்சி பெறுவதற்கான குறைந்தபட்ச மதிப்பெண் 60 சதவீதம் அதாவது 150–க்கு 90 மதிப்பெண்கள் எடுக்க வேண்டும். ஏற்கனவே இரண்டு தடவை நடத்தப்பட்ட தகுதித்தேர்வுகளில் தேர்ச்சி விகிதம் குறைவாக இருந்ததால் அதிலும் குறிப்பாக ஆதி திராவிட வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் மிகக்குறைந்த எண்ணிக்கையில் இருந்ததால் குறைந்தபட்சம் இடஒதுக்கீட்டு பிரிவினருக்காவது சற்று மதிப்பெண் சலுகை வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தேர்ச்சி மதிப்பெண்ணில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை.
தகுதித்தேர்வுக்கான விண்ணப்ப படிவங்கள் அடுத்த மாதம் (ஜூன்) 17–ந் தேதி தமிழகம் முழுவதும் அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளிகளிலும் விற்பனை செய்யப்பட உள்ளன. விண்ணப்பத்தின் விலை ரூ.50. தேர்வுக்கட்டணம் ரூ.500. ஆதி திராவிடர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.250 மட்டும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அதிகாரி (டி.இ.ஓ. ஆபீஸ்) அலுவலகத்தில் ஜூலை மாதம் 1–ந் தேதிக்குள் நேரில் சமர்ப்பிக்க வேண்டும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
இந்த ஆண்டு ஏறத்தாழ 7 லட்சம் பேர் தகுதித்தேர்வு எழுதுவார்கள் என்று தேர்வு வாரியம் எதிர்பார்க்கிறது. எனவே, சுமார் 14 லட்சம் விண்ணப்ப படிவங்களை அச்சிட முடிவு செய்துள்ளது. கடந்த ஆண்டு மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகங்களில் மட்டுமே விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன. இதனால், ஒருசில மாவட்டங்களில் கட்டுக்கடங்காத கூட்டம் அலைமோதி நெரிசல் ஏற்பட்டது. இதை தவிர்க்கும் வகையில், இந்த அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளிகளிலும் விண்ணப்பங்கள் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.
கடந்த ஆண்டுக்கான காலி பணி இடங்கள், இந்த ஆண்டு அனுமதிக்கப்பட்ட இடங்கள் என மொத்தம் 15 ஆயிரம் ஆசிரியர் பணி இடங்கள் தகுதித்தேர்வு மூலமாக நிரப்பப்பட உள்ளன. இதில் பட்டதாரி ஆசிரியர் பணி இடங்கள் 13 ஆயிரம், இடைநிலை ஆசிரியர் இடங்கள் 2 ஆயிரம். பணிநியமன முறையில் இந்த ஆண்டு புதிய முறை அமல்படுத்தப்படுகிறது. முதலில் தகுதித்தேர்வு நடத்தப்பட்டு அதில் வெற்றிபெற்றவர்களின் சான்றிதழ் சரிபார்க்கப்படும். அதன்பிறகு தகுதியான நபர்களுக்கு தகுதித்தேர்வில் தேர்ச்சிபெற்றதற்கான சான்றிதழ் வழங்கப்படும். இதைத்தொடர்ந்து, காலி இடங்கள் பற்றிய அறிவிப்பு வெளியிடப்படும்.
தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் தங்கள் தகுதித்தேர்வு மதிப்பெண்ணுடன் விண்ணப்பிக்க வேண்டும். பட்டதாரி ஆசிரியர்களைப் பொருத்தமட்டில், தகுதித்தேர்வு மதிப்பெண் மற்றும் பிளஸ்–2, டிகிரி, பி.எட். மதிப்பெண் அடிப்படையில் மெரிட் பட்டியல் தயார்செய்யப்பட்டு ஆசிரியர் தேர்வு செய்யப்படுவார்கள். இடைநிலை ஆசிரியர்கள் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு உட்பட்டு, மாநில அளவிலான பதிவுமூப்பு அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். 


குறிப்பு : பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கணினி அறிவியல் ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு அறிவிப்பினை இந்த TET ல் வெளியாகவில்லை

துறைத் தேர்வுகளுக்கான நுழைவுச்சீட்டு பதிவிறக்கம்..

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பான துறைத் தேர்வுகள் 2013

இந்த மாதம் 24 முதல் 31 வரை நடைபெற உள்ளது

அதற்கான நுழைவுச் சீட்டினை பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும். 

Friday, May 17, 2013

UPSC PRELIMINARY EXAM 2013 HALLTICKET DOWNLOAD

BE விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு வருகின்ற 19ஆம் தேதி 21 தலைமை தபால் நிலையங்கள் விண்ணப்பங்களை பெறுவதெற்கென்றே திறக்கப்பட்டிருக்கும்


வருகின்ற 19ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தமிழகத்தில் 21 தலைமை தபால் நிலையங்கள் திறந்திருக்கும் என தபால் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்ஜினியரிங் படிப்புக்கான பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வருகின்ற 20ஆம் தேதி கடைசி நாளாகும். ஆனால் 19ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை என்பதால் வழக்கமாக தபால் நிலையங்கள் செயல்படாது. இதனால் பல மாணவர்கள் குறித்த நாளில் விண்ணப்பங்களை அனுப்ப முடியாமல் சிரமப்பட வாய்ப்புண்டு.

இதை கவனத்தில் கொண்டு, வருகின்ற 19ஆம் தேதி தபால் துறையின் தெற்கு பகுதியில், திண்டுக்கல், பழனி, நாகர்கோவில், தக்கலை, காரைக்குடி, கோவில்பட்டி, தென்காசி, மதுரை, தல்லாகுளம், ராமநாதபுரம், பரமக்குடி, சிவகங்கை, பெரியகுளம், பாளையங்கோட்டை, திருநெல்வேலி, தூத்துக்குடி, திருச்செந்தூர், ராஜபாளையம், சிவகாசி, விருதுநகர் மற்றும் தேனி ஆகிய 21 தலைமை தபால் நிலையங்கள் விண்ணப்பங்களை பெறுவதெற்கென்றே திறக்கப்பட்டிருக்கும்.

இந்த சந்தர்ப்பத்தை பொதுமக்களும், மாணவர்களும் பயன்படுத்திக்கொள்ளுமாறு தபால்துறையின் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Thursday, May 16, 2013

TNPSC Group 1 தேர்வு முடிவுகள் வெளியீடு



தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில், குரூப் 1 பதவியில் அடங்கிய துணை கலெக்டர், போலீஸ் டிஎஸ்பி, வணிகவரித்துறை துணை ஆணையாளர், மாவட்ட பதிவாளர் மற்றும் மாவட்ட வேலை வாய்ப்பு அதிகாரி உள்ளிட்ட காலி பணியிடங்களுக்கான முதற்கட்டத் தேர்வு கடந்த பிப்ரவரி 16ம் தேதி நடந்தது. இதில் தமிழகம் முழுவதிலும் ஒரு லட்சத்து 30 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர்.

இந்த முதல்நிலைத் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளத்தில்
(www.tnpsc.gov.in) தேர்வு முடிவுகளைக் காணலாம். தேர்ச்சி பெற்றவர்கள் தங்களது சான்றிதழ் நகல்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று டி.என்.பி.எஸ்.சி. அறிவுறுத்தியுள்ளது.

ஜூன் 7-ம் தேதிக்குள் தபால் மூலமாகவோ, இணையதளம் மூலமாகவோ சான்றிதழ் நகல்களை அனுப்பலாம். நகல்களை அனுப்பாதவர்களின் விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்ச்சி பெற்றவர்களுக்கான பிரதானத் தேர்வு குறித்த அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும்.

நன்றி ... ஆந்தை ரிப்போர்டர்

Wednesday, May 15, 2013

அரசு பள்ளிகளில் சேருங்கள் உங்கள் பிள்ளைகளை...



உங்கள் வரிபணம் .... உங்கள் உரிமை... அரசாங்க பள்ளிகளில் உங்கள் குழந்தைகளை சேர்ப்பது..

கல்வி வியாபாரமாக்கப்படுவதை நீங்கள் இன்று ஊக்குவித்தால் நாளை ஏழைகளுக்கு கூட கல்வி இலவசமாக கிடைக்காமல் போகலாம்...

வேலை மட்டும் அரசாங்கம் அளிக்க வேண்டும்... படிப்பை தனியாரிடம்தான் படிக்க வேண்டுமானால் இன்று மிக பெரிய வேலைவாய்ப்பினை அளித்து கொண்டிருக்கும்..

‘அரசு ஊழியர்கள் - ஆசிரியர்கள் ‘ என்பதிலிருந்து ஆசிரியர்கள் என்ற ஒரு பதவியை.... அரசாங்கம் அளிக்காது... அது நாளை உங்கள் குழந்தைகளைதான் வேலைவாய்ப்பில் பாதிக்கும் என்பதை மனதில் கொள்ளுங்கள்...

அரசாங்க பள்ளிகளில் படிப்பவர்கள் எல்லாம் முட்டாள்கள் அல்ல... தனியார் பள்ளிகளில் படிப்பவர்கள் எல்லாம் அதி புத்திசாளிகளும் அல்ல..

எலலா பள்ளிகளிலும் எல்லா வகை மாணவர்களும் இருக்கிறார்கள்... அவர்களை அவர்களின் தேவைக்கேற்ப முன்னேற வைப்பது ஆசிரியர்களின் தெய்வீக பணி...  


மாணவர்களின் தன்னிச்சையான முழுமையான வளர்ச்சிக்கு உத்திரவாதம் அளிப்பவை அரசாங்க பள்ளிகளே... உங்கள் பிள்ளைகளை படி... மனப்பாடம் செய் ... என்று வலியுறுத்துவதைவிட அவர்களின் ஆற்றல்களை சிறுவயது முதலே கண்டறிந்து மேம்படுத்துவதே சாலச்சிறந்த கற்பித்தலாக அமையும்...


Tuesday, May 14, 2013

PG TRB 2012 தமிழ்வழியில் படித்தவர்களுக்கு 23, 24–ந்தேதிகளில் சான்றிதழ் சரிபார்ப்பு

 முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வரலாறு, பொருளாதாரம், வணிகவியல் பாடப்பிரிவுகளில் தமிழ்வழி ஒதுக்கீட்டின் கீழ் புதிதாக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு 23, 24–ந் தேதிகளில் சென்னை உள்பட 7 இடங்களில் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற உள்ளது.

 இதுதொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம்வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:– 

தமிழ்வழி முன்னுரிமை இடங்கள் முதுகலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி ஆசிரியர் (கிரேடு–1) நியமனத்திற்கான (2011–2012) போட்டித்தேர்வில் வெற்றி பெற்றவர்கள் தங்கள் விண்ணப்பத்தில் தமிழ்வழியில் படித்ததற்கான முன்னுரிமை கோரியவர்கள் 3.8.2012 மற்றும் 30.10.2012 ஆகிய தேதிகளில் நடைபெற்ற சான்றிதழ் சரிபார்ப்புகளில் வரலாறு, பொருளாதாரம், வணிகவியல் பாடங்களில் தமிழ்வழியில் ஒதுக்கப்பட்ட பணி இடங்களுக்கு அழைக்கப்பட்டனர்.

 அப்போது, பெரும்பாலான தேர்வர்கள், எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்–2, இளநிலை பட்டம், முதுகலை பட்டம், பி.எட். பட்டம்ஆகியவற்றை முற்றிலும் தமிழ்வழியில் படித்ததற்கான சான்றிதழ்களை சமர்ப்பிக்கவில்லை. 

இதனால், வரலாறு, பொருளாதாரம் மற்றும் வணிகவியல் பாடங்களின் தமிழ்வழி முன்னுரிமை பணி இடங்களை ஆசிரியர் தேர்வு வாரியத்தால்நிரப்ப இயலவில்லை. 

சான்றிதழ் சரிபார்ப்பு 


எனவே, மீதமுள்ள தேர்வர்களில் விண்ணப்பத்தில் தமிழ்வழி என்று குறிப்பிட்டுள்ளவர்களில் வரையறுக்கப்பட்ட மதிப்பெண் பெற்றவர்களுக்கு மட்டும் பாடவாரியாக சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தற்போது ஒரு வாய்ப்பு அளிக்கப்படுகிறது.

 சான்றிதழ் சரிபார்ப்பு கீழ்க்கண்ட இடங்களில் 23, 24–ந் தேதிகளில் நடைபெறுகிறது.
 1. சென்னை – பாத்திமா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி, 5, போலீஸ் லேன், சைதாப்பேட்டை, சென்னை– 15
 2. விழுப்புரம் – அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, விழுப்புரம் 
3. சேலம் – ஜெயராம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, நெத்திமேடு, சேலம்– 2 
4. கோவை – நல்லாயன் உயர்நிலைப்பள்ளி, கோவை– 1
 5. மதுரை – சாய்ராம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, எம்.ஏ.கே.சாலை, மதுரை– 2 6. திருநெல்வேலி – ரோஸ்மேரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, வி.எம்.சத்திரம், பாளையங்கோட்டை
 7. திருச்சி – ஏ.டி.எம்.ஆர்.சி.எம். வாசவி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, 11, பேர்ட்ஸ் சாலை, கன்டோன்மென்ட், திருச்சி.

 யார் யாரிடம் சான்று? 

 

தேர்வர்கள் சான்றிதழ் சரிபார்ப்பின்போது, வரலாறு, பொருளாதாரம், வணிகவியல் பாடங்களில் தமிழ்வழியில் படித்ததற்கான சான்றிதழ்களை மேலொப்பம் பெற்று சமர்ப்பிக்க வேண்டும். அரசியல் அறிவியல் பாடத்திற்குரிய பின்னடைவு பணி இடங்களுக்கு (பேக்–லாக் வேகன்சி) தகுதி உள்ள தேர்வர்களுக்கும் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட உள்ளது. 

அவர்களின் விவரம் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் ( www.trb.tn.nic.in ) வெளியிடப்பட்டு இருக்கிறது. ஒவ்வொரு கல்வித்தகுதிக்கும் யார் யாரிடம் சான்று பெற வேண்டும் என்ற விவரம் கீழே கொடுக்கப்பட்டு உள்ளது. 

எஸ்.எஸ்.எல்.சி. – பள்ளி தலைமை ஆசிரியர் 

பிளஸ்–2 – பள்ளி தலைமை ஆசிரியர் 

இளங்கலை பட்டம் – கல்லூரி முதல்வர் அல்லது பல்கலைக்கழக பதிவாளர் 

முதுகலை பட்டம் – கல்லூரி முதல்வர் அல்லது பல்கலைக்கழக பதிவாளர் 

பி.எட். பட்டம் – பல்கலைக்கழக பதிவாளர் மட்டும் 

 சான்றிதழ் சரிபார்ப்பின்போது, தமிழ்வழியில் படித்ததற்கான உரிய சான்றிதழ்களை சமர்ப்பிக்காத பட்சத்தில் தமிழ்வழி முன்னுரிமை பணி இடத்திற்கு தேர்வர்கள் தகுதியற்றவராக கருதப்படுவார். 

3.8.2012 மற்றும் 30.10.2012 அன்று நடைபெற்ற சான்றிதழ் சரிபார்ப்பின்போது, மேற்கண்டவாறு தமிழ்வழியில் படித்தற்கான சான்றிதழ்களை சமர்ப்பிக்காதவர்கள் தற்போது உரிய சான்றிதழ்கள் பெற்றிருந்தால் அவர்கள் 27–ந் தேதி அன்று சென்னையில் உள்ள ஆசிரியர் தேர்வு வாரியத்தில் நேரடியாக சமர்ப்பிக்க வேண்டும். 

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

அண்ணாமலை பல்கலைக்கழகம் Online Application & Hall ticket May 2013

Monday, May 13, 2013

PG TRB முடிந்தவுடன் TNTET 2013?

 TNTET 2013 பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பினை காண இங்கே கிளிக் செய்யவும்


முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வு முடிந்த பிறகு ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படும் எனத் தெரிகிறது. 

பெரும்பாலும் ஆகஸ்ட் முதல் வாரம் அல்லது இரண்டாவது வாரத்தில் இந்தத் தேர்வு நடைபெற வாய்ப்புள்ளது. 

ஆசிரியர் தகுதித் தேர்வுக்குப் பிறகு
 பாலிடெக்னிக் விரிவுரையாளர்கள், 
அரசு கலைக் கல்லூரி உதவிப் பேராசிரியர்கள்,
 உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள், 
விவசாயத் துறை ஆசிரியர்கள்,
 மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்துக்கான விரிவுரையாளர்கள் 

ஆகியோர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

PG TRB பாடதிட்டம் மற்றும் முந்தைய ஆண்டு வினா விடைகள்...

பாடத்திட்டங்களை பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்...



முந்தைய ஆண்டு PG TRB வினா விடைகளை பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்..


இவை சென்ற ஆண்டிற்கான பாட திட்டங்களே.. micro Biology உட்பட சில பாடதிட்டங்கள் இவற்றில் இடம் பெறவில்லை என்பதை மனதில் கொள்ளவும்..  

Sunday, May 12, 2013

TNPSC தமிழுக்கு முக்கியத்துவம் எந்த அளவு!


குரூப்-2 மெயின் தேர்வில் பொதுத் தமிழ்ப் பாடம் மீண்டும் சேர்ப்பு
குரூப்-4 தேர்வில் பொதுத் தமிழ்ப் பாடத்துக்கு மீண்டும் 100 மதிப்பெண்கள்
விஏஓ தேர்வில் பொதுத் தமிழ்ப் பாடத்துக்கு 80 மதிப்பெண்கள்
விஏஓ தேர்வில் அடிப்படை கிராம நிர்வாகப் பகுதியில் வினா எண்ணிக்கை குறைப்பு
குரூப்-1 தேர்வில் எந்த மாற்றமும் இல்லை


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் பல்வேறு தேர்வுகளுக்கான பாடத்திட்டங்களில் மாற்றங்கள் செய்து அண்மையில் அறிவிக்கப்பட்டன. அந்தப் பாடத்திட்டங்களில் பொதுத் தமிழுக்கான முக்கியத்துவம் குறைக்கப்பட்டதாக எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து, ஏற்கெனவே திருத்தம் செய்த பாடத்திட்டங்களில் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் மீண்டும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

“பழைய பாடத்திட்டத்தை மாற்றி புதிய பாடத்திட்டம் கடந்த மார்ச் 12-ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதில் தமிழுக்கு முக்கியத்துவம் இல்லை என்ற கருத்து எழுந்தது. இதைத் தொடர்ந்து மார்ச்சில் வெளியிடப்பட்ட பாடத் திட்டங்களை மீண்டும் ஆய்வு செய்து தமிழுக்கு உரிய முக்கியத்துவம் அளித்து, திருத்தங்களையும் செய்துள்ளோம். குரூப்-2, குரூப்-2ஏ, குரூப்-3, குரூப்-3ஏ, குரூப்-4, விஏஓ ஆகிய ஆறு தேர்வுகளுக்கான பாடத்திட்டங்கள் திருத்தி அமைக்கப்பட்டுள்ளன” என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தலைவர் நவநீதகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். “குரூப்-2 முதன்மைத் தேர்வில் ‘டிராப்ட்டிங்’ என்ற பகுதி புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளது. துணை வணிகவரி அதிகாரி, நகராட்சி கமிஷனர் போன்ற முக்கியப் பதவிகளுக்கு வருபவர்கள் கருத்துகளை கோர்வையுடன் அறிக்கையாகத் தயாரிக்கும் திறனைப் பெறுவது அவசியம். அந்த நோக்கத்தில் இந்தப் பகுதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது” என்கிறார் அவர்.

குரூப்-1 தேர்வில் புதிதாக எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. குரூப்-2 (நேர்முகத் தேர்வு உள்ள பணி) முதல்நிலைத் தேர்வு , குரூப்-2ஏ (நேர்முகத் தேர்வு அல்லாத பணி), குரூப்-3, குரூப்-3ஏ, குரூப்-4 ஆகிய பணிகளுக்கான தேர்வு முறையில் பொதுத் தமிழ் அல்லது பொது ஆங்கிலத்துக்கு (எஸ்எஸ்எல்சி தரத்தில்) மேலும் முக்கியத்துவம் தரும் வகையில் அத்தேர்வு 100 வினாக்கள் கொண்டதாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

கிராம நிர்வாக அலுவலர் (விஏஓ) பணிக்கான தேர்வு முறை பொதுத் தமிழ் மற்றும் பொது ஆங்கிலம் ஆகியவற்றில் 30 வினாக்களுக்குப் பதிலாக 80 வினாக்கள் கொண்டதாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.  பொதுத்தாளில் 100 வினாக்களுக்குப் பதிலாக 75 வினாக்களும், அடிப்படை கிராம நிர்வாகப் பகுதியில் 50 வினாக்களுக்குப் பதிலாக 25 வினாக்களும் கொண்டு வரப்பட்டுள்ளன. திறனறித் தேர்வுக்கான 20 வினாக்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. தற்போது நடைமுறையில் உள்ளபடி தேர்வு எழுதுபவர்கள் அனைவரும் ஆங்கிலம் அல்லது தமிழில் தேர்வு எழுத அனுமதிக்கப்படுகிறார்கள். திருத்தப்பட்ட பாடத்திட்டத்தில் தமிழ் மொழிக்கு உரிய முக்கியத்துவம் அதிகரிக்கப்பட்டுள்ளது.


குரூப்-2 (நேர்முகத் தேர்வு உள்ள பணி) :

இந்தப் பணிக்கான மெயின் தேர்வில் பொது அறிவுப் பாடத்தில் 75 கேள்விகள் கேட்கப்படும். திறன் அறிதல் மற்றும் கூர்ந்து ஆய்வு செய்தல் (ஆப்டிட்யூட் அண்ட் மெண்டல் எபிலிட்டி) பிரிவில் 25 கேள்விகள் (எஸ்எஸ்எல்சி தரத்தில்) கேட்கப்படும். பொதுத் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் (எஸ்எஸ்எல்சி தரத்தில்) 100 கேள்விகள் கேட்கப்படும். குரூப்-2 மெயின் தேர்வில் பகுதி-ஏ பிரிவில் 125 கேள்விகள் அப்ஜெக்ட்டிவ் முறையில் கேட்கப்படும். இப்பகுதிக்கு விடையளிக்க இரண்டு மணி நேரம் அளிக்கப்படும். இதற்கான மதிப்பெண்கள் 125. பகுதி-பி பிரிவில் கட்டுரைப் பகுதியில் இரண்டு கேள்விகள் கேட்கப்படும். இப்பகுதிக்கு விடையளிக்க ஒரு மணி நேரம் வழங்கப்படும். இதற்கு 75 மதிப்பெண்கள் வழங்கப்படும்.


குரூப்-2ஏ (நேர்முகத் தேர்வு அல்லாத பணி) :

மெயின் தேர்வில் பொது அறிவுப் பகுதியில் 75 கேள்விகள் கேட்கப்படும். திறன் அறிதல் மற்றும் கூர்ந்து ஆய்வு செய்தல் பகுதிக்கு (எஸ்எஸ்எல்சி தரத்தில்) 25 கேள்விகள் கேட்கப்படும். பொதுத் தமிழ் அல்லது பொது ஆங்கிலம் (எஸ்எஸ்எல்சி தரத்தில்) பகுதியில் 100 கேள்விகள் கேட்கப்படும். இந்த மூன்று மணி நேரத் தேர்வுக்கு மொத்தம் 300 மதிப்பெண்கள் வழங்கப்படும்.


குரூப்-3 :

மெயின் தேர்வில் அப்ஜெக்டிவ் முறையில் கேள்விகள் கேட்கப்படும். மூன்று மணி நேரம் நடைபெறும் இந்தத் தேர்வுக்கு 300 மதிப்பெண்கள் வழங்கப்படும். பொது அறிவுப் பகுதியில் 75 கேள்விகள் கேட்கப்படும். திறன் அறிதல் மற்றும் கூர்ந்து ஆய்வு செய்தல் பகுதிக்கு (எஸ்எஸ்எல்சி தரத்தில்) 25 மதிப்பெண்கள் வழங்கப்படும். பொதுத் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் (எஸ்எஸ்எல்சி தரத்தில்) 100 கேள்விகள் கேட்கப்படும்.

குரூப்-3ஏ :

மெயின் தேர்வில் அப்ஜெக்டிவ் முறையில் கேள்விகள் கேட்கப்படும். மூன்று மணி நேரம் நடைபெறும் இந்தத் தேர்வுக்கு 300 மதிப்பெண்கள் வழங்கப்படும். பொது அறிவு பகுதியில் 75 கேள்விகள் கேட்கப்படும். திறன் அறிதல் மற்றும் கூர்ந்து ஆய்வு செய்தல் பகுதிக்கு (எஸ்எஸ்எல்சி தரத்தில்) 25 மதிப்பெண்கள் வழங்கப்படும். பொதுத் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் (எஸ்எஸ்எல்சி தரத்தில்) 100 கேள்விகள் கேட்கப்படும்.


குரூப்-4 :

மெயின் தேர்வில் அப்ஜெக்டிவ் முறையில் கேள்விகள் கேட்கப்படும். மூன்று மணி நேரம் நடைபெறும் இந்தத் தேர்வுக்கு 300 மதிப்பெண்கள் வழங்கப்படும். பொது அறிவுப் பகுதியில் 75 கேள்விகள் கேட்கப்படும். திறன் அறிதல் மற்றும் கூர்ந்து ஆய்வு செய்தல் பகுதிக்கு (எஸ்எஸ்எல்சி தரத்தில்) 25 மதிப்பெண்கள் வழங்கப்படும். பொதுத் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் (எஸ்எஸ்எல்சி தரத்தில்) 100 கேள்விகள் கேட்கப்படும்.

விஏஓ தேர்வு :

அப்ஜெக்ட்டிவ் முறையில் கேள்விகள் கேட்கப்படும். மூன்று மணி நேரம் நடைபெறும் இந்தத் தேர்வுக்கு மொத்தம் 300 மதிப்பெண்கள் வழங்கப்படும். பொது அறிவுப் பகுதியில் 75 கேள்விகள் கேட்கப்படும். கிராம நிர்வாக அடிப்படைகள் குறித்து 25 வினாக்கள் கேட்கப்படும். திறன் அறிதல் மற்றும் கூர்ந்து ஆய்வு செய்தல் பகுதிக்கு (எஸ்எஸ்எல்சி தரத்தில்) 20 மதிப்பெண்கள் வழங்கப்படும். பொதுத் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் (எஸ்எஸ்எல்சி தரத்தில்) 80 கேள்விகள் கேட்கப்படும்.


நன்றி... புதிய தலைமுறை கல்வி 

Saturday, May 11, 2013

B.Sc ( கணினி அறிவியல் ) B.Ed முடித்தவர்களுக்கு ஆசிரியர் பணி அளிக்காதது ஏன்?


ரசுப் பள்ளிகளில் கணிப்பொறியியல் பாடத்துக்கு பி.எட். முடித்த பட்டதாரி ஆசிரியர்களுக்குப் பதிலாக, வேறு கல்வித் தகுதிகளைக் கொண்ட ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகத் தொடர்ந்து புகார் கூறப்பட்டு வருகிறது.
வரும் கல்வி ஆண்டிலாவது, தங்களுக்கு வாய்ப்புக் கிடைக்குமா என்று கணிப்பொறி அறிவியலில் பி.எட். முடித்தவர்கள் காத்திருக்கிறார்கள்.
தமிழகம் முழுவதும் சுமார் 2 ஆயிரம் அரசு மேல்நிலைப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இந்தப்பள்ளிகள் அனைத்திலும் கணிப்பொறியியல் பாடம் கற்றுத் தரப்படுகிறது.
பிற பாடங்களுக்கு அத்துறையில் பி.எட். முடித்த ஆசிரியர்களே நியமிக்கப்பட்டு வரும் நிலையில், கணிப்பொறியியல் பாடத்துக்கு மட்டும் இதுவரை பி.எட். ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை.
தற்போது அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு கணிப்பொறியியல் பாடத்தைக் கற்றுத் தருவதற்கு பி.எட். பட்டம் பெறாதவர்களை அரசு நியமித்துள்ளது.

Friday, May 10, 2013

TNTET cut off 60 % க்கு கீழே குறையாது... சட்டசபையில் அறிவிப்பு


ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான கட் - ஆஃப் மதிப்பெண்களான 60 சதவீதத்தைக் குறைக்கும் வாய்ப்பு இல்லை என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் வைகைச்செல்வன் கூறினார். 

சட்டப்பேரவையில் இன்று பள்ளிக் கல்வி துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் வைகைச்செல்வன் பேசியது: 

பணி தேர்வின் போது இடஒதுக்கீட்டு முறையை அரசு சரியாகக் கடைப்பிடித்துவருகிறது. அதேசமயம் ஆசிரியர் தகுதி தேர்வுக்கு 60 சதவீத மதிப்பெண்கள் பெற வேண்டும் என்பது அரசின் கொள்கை முடிவாகும். 

மாணவர்களுக்கு சிறந்த கல்வியை வழங்கவேண்டும் என்பதற்காகவும், தரமான ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்பதற்காகவும் இந்த முறையைப் பின்பற்றுகிறோம்.

 எனவே ஆசிரியர் தகுதி தேர்வுக்கான கட் - ஆஃப் மதிப்பெண்ணை 60 சதவீதத்தில் இருந்து குறைக்கும் எண்ணம் அரசிடம் இல்லை என்று தெரிவித்தார்.


பின் குறிப்பு :
 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள், 1,094; 
இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள், 887; 

என்ற அறிவிப்பு  இந்த வருடம் TET நடக்குமா என்ற கேள்வியை ஆசிரியர்களிடம் ஏற்படுத்தி உள்ளது.

புதிய ஆசிரியர் பணியிடங்கள் எண்ணிக்கை 3711 மட்டுமே!

3711 புதிய ஆசிரியர்கள் மற்றும் 1146 ஆசிரியரல்லாத பணியிடங்கள் நிரப்பப்படும் - அமைச்சர் 

பள்ளிக்கல்வித்துறையில் காலியாக 3711 ஆசிரியர்கள் பணியிடங்கள் மற்றும் 1146 ஆசிரியரல்லாத பணியிடங்கள் நிரப்பப்படும் என்று சட்டசபையில் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் இன்று அறிவித்தார்.


சட்டசபையில், அவர் வெளியிட்ட அறிவிப்பு: கடந்த, 2011-12, 12-13 ஆகிய ஆண்டுகளில், 63 ஆயிரத்து, 125 ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
 இதன் தொடர்ச்சியாக, நடப்பு கல்வி ஆண்டில், 
நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்கள், 313;
 துவக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்கள், 380; 
முதுகலை ஆசிரியர் பணியிடங்கள், 880;
 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள், 1,094; 
இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள், 887;
 சிறப்பாசிரியர் பணியிடங்கள், 156 என, 3,711 பணியிடங்கள் நிரப்பப்படும்.

மேலும், உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள், 16 பேர்,

 அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர்கள், இரண்டு பேர், 
விரிவுரையாளர்கள், 99 பேர், உடற்கல்வி இயக்குனர்கள், எட்டு பேர் என, 
125 பேரும் நியமனம் செய்யப்படுவர்.

ஆசிரியர் அல்லாத பணியிடங்கள்:உதவியாளர்கள் (நேரடி நியமனம்), 850 பேர்; சுருக்கெழுத்து தட்டச்சர்கள், 18 பேர்; இளநிலை உதவியாளர்கள், 188 பேர் மற்றும் தட்டச்சர்கள், 90 பேர் என, 1,146 பேரும், நடப்பு கல்வி ஆண்டில் நியமனம் செய்யப்படுவர்.இவ்வாறு அமைச்சர் அறிவித்தார்.



மேலும் 17 வயதுக்குட்பட்ட மாணவர்கள் சதுரங்கப்போட்டி விளையாட ரூ.25 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
  

Thursday, May 9, 2013

முதுநிலை ஆசிரியர் பணிக்கு ஜூலை 21ல் எழுத்து தேர்வு

முதுநிலை ஆசிரியருக்கான 2,881 காலி பணியிடங்களை நிரப்ப ஜூலை 21ம் தேதி எழுத்து தேர்வு நடக்கிறது. 

 தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம்(டிஆர்பி), 2012&2013ம் ஆண்டு முதுநிலை உதவியாளர் மற்றும் உடற்கல்வி டைரக்டர் கிரேடில் காலியாக உள்ள 2881 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளது. 

தமிழ் பாடப்பிரிவில் 605 இடம், 
ஆங்கிலம் 347, 
கணிதம் 288,
 இயற்பியல் 228, 
வேதியியல் 220, 
தாவரவியல் 193, 
விலங்கியல் 181
, வரலாறு 173,
 புவியியல் 21, 
பொருளாதாரம் 257, 
வணிகம் 300,
 அரசியல் அறிவியல் 1,
 ஹோம் சயின்ஸ் 1,
 உடற்கல்வியியல்(டைரக்டர் கிரேடு 1), 17, 
மைக்ரோ பயாலஜி 31, 
பயோ கெமிஸ்டிரி 16,
 தெலுங்கு 2 இடமும் இடம் பெற்றுள்ளன.

 ஓசி, பிசி, பிசிஎம், எம்பிசி/டிஎன்சி, எஸ்சி, எஸ்சிஏ, எஸ்டி ஜாதிவாரிய பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. 

இத்தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள் எம்ஏ, எம்எஸ்சி, எம்.காம் பட்டப்படிப்புடன் பி.எட் படித்திருக்க வேண்டும்.

 இத்தேர்வுக்கான விண்ணப்பங்கள் மே 31ம் தேதி முதல் வினியோகிக்கப்படுகிறது. 

32 மாவட்டங்களில் உள்ள தலைமை கல்வி அதிகாரி அலுவலத்தில் ரூ.50 செலுத்திவிண்ணப்பங்களை பெற்று கொள்ளலாம்.

 பூர்த்தி செய்த விண்ணப்பங்களை ஜூன் 14ம் தேதி மாலை 5.30 மணி வரை அனுப்பலாம். 

ஜூலை 21ம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை எழுத்து தேர்வு நடைபெறும்.

 150 மதிப்பெண்களுக்கு வினாக்கள் கேட்கப்படும். தேர்வு கட்டணம் ரூ.500 செலுத்த வேண்டும். 
எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.250 தேர்வு கட்டணம் செலுத்த வேண்டும்.
 கூடுதல் விவரங்களை http://trb.tn.nic.in/  என்ற இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.


Wednesday, May 8, 2013

உங்களுக்கு blog update sms உடனுக்குடன் தேவையா?

http://gupshup.me/groups/tntet2012

Google SmS வேலை செய்யாத காரணத்தால் Gupshup SMS சேவையை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது...

இந்த வலைபூவின் updates ஐ உடனுக்குடன் தெரிந்துகொள்ள http://gupshup.me/groups/tntet2012 இந்த லிங்கை கிளிக் செய்து அதில் join செய்து கொள்ளவும்..

நன்றி.. 

பன்னிரண்டாம் வகுப்பு மறுகூட்டல் விண்ணப்பிக்க வழிமுறைகள் என்ன?

+2 விடைத்தாள் மறு கூட்டல் : மே-10 முதல் ஆரம்பம்.. ..

மார்ச் 2013 பிளஸ்-2 தேர்வு எழுதிய மாணவர்கள் விடைத் தாள் நகல் பெறவும், மறு கூட்டலுக்கும் மே 10-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுகள் இயக்குநர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அரசு தேர்வுகள் இயக்கநர் வெளியிட்டுள்ள செய்தியில்:

பிளஸ்-2 தேர்வு எழுதிய மாணவர்கள் விடைத் தாள் நகலைப் பெறவும், மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்கவும் மே 10-ம் தேதி முதல் மே 13-ம் தேதி வரை www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். ஒவ்வொரு பாடத்துக்கும் தனித் தனியாக விண்ணப்பிக்க வேண்டும்.ஆன்-லைன் மூலமே விடைத் தாள் நகலை மாணவர்கள் பெற்றுக் கொள்ளலாம் என்பதோடு, மறுகூட்டல் முடிவுகளையும் அறிந்து கொள்ளலாம். இதற்கு விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பிக்கும்போது பதிவிறக்கம் செய்த ஒப்புகைச் சீட்டை மாணவர்கள் பத்திரமாக வைத்திருக்க வேண்டும். அதிலுள்ள விண்ணப்ப எண்ணைப் பயன்படுத்தியே நகலை பதிவிறக்கம் செய்ய முடியும்.
கட்டணம் எவ்வளவு? விடைத்தாள் நகல் பெற மொழிப் பாடங்களுக்கு தலா ரூ. 550-ம், பிற பாடங்களுக்கு தலா ரூ. 275-ம் கட்டணம் செலுத்த வேண்டும்.மறு கூட்டலுக்கு விண்ணப்பிப்போர் மொழிப் பாடம் மற்றும் உயிரியல் பாடங்களுக்கு தலா ரூ. 305-ம், பிற பாடங்களுக்கு தலா ரூ. 205 கட்டணம் செலுத்த வேண்டும்.இந்த கட்டணத்தை இணைய தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்த சலான் மூலம் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கிக் கிளைகளில் செலுத்த வேண்டும்.

மறுமதிப்பீடு: மாணவர்கள் விடைத்தாள் நகலைப் பெற்ற பிறகே, மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க முடியும்.மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் மொழிப் பாடங்களுக்கு தலா ரூ. 1010-ம், பிற பாடங்களுக்கு தலா ரூ. 505-ம் கட்டணம் செலுத்த வேண்டும்.மதிப்பெண் சான்றிதழ்: பிளஸ்-2 தேர்வு எழுதிய மாணவர்கள் அந்தந்த பள்ளிகளிலும், தனித் தேர்வர்கள் தேர்வு எழுதிய மையங்களிலும் மே 27-ம் தேதியன்று மதிப்பெண் சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம்.சிறப்பு அனுமதித் திட்டத்தின் கீழ் (தட்கல்) விண்ணப்பித்து, தேர்வு எழுதிய தனித் தேர்வர்களுக்கு தபால் மூலம் அவர்களுடைய வீட்டு முகவரிக்கு மதிப்பெண் சான்றிதழ்கள் அனுப்பி வைக்கப்படும்.

பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் 2013 வெளியிடப்பட்டுவிட்டன..

http://tnresults.nic.in/tncfplus/cfplus.htm

எஸ்.எம்.எஸ். மூலம் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ள 
TNBOARD என டைப் செய்து 
இடைவெளி விட்டு 
உங்கள் பதிவெண்ணை டைப் செய்து 
பின்னர் உங்கள் பிறந்த தேதி, மாதம் மற்றும் வருடத்தை டைப் செய்து, 
09282232585 என்ற எண்ணிற்கு எஸ்.எம்.எஸ். அனுப்ப வேண்டும்.
(எ.டு.): TNBOARD 77777 01/01/2013 

12 ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியீடு
முதல் இடம் :
நாமக்கல் மாணவர்கள் ஜெயசூர்யா ( 1189 ), 
அபினேஷ் ( 1189 ) 
மாநிலத்திலேயே முதலிடம்

1188 மதிப்பெண் பெற்று பழனிராஜ், அகல்யா ஆகியோர் மாநிலத்திலேயே 2வது இடம் பிடித்தனர்

பிளஸ் 2 தேர்வில் மாணவ, மாணவிகள் 9 பேர் மாநில அளவில் 3ம் இடம் பிடித்துள்ளனர். 

+2 தேர்வில்...
இயற்பியல் - 36 பேர் 
கணிதம் - 2352 பேர் 
வேதியியல் - 1499 பேர் உயிரியல் - 682 பேர் 
200க்கு 200 மதிபெண்கள் பெற்றுள்ளனர் 


பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: மாவட்ட வாரியாக தேர்ச்சி விபரம் :

விவரங்கள் முறையே மாவட்டம்-தேர்வு எழுதியவர்கள்-தேர்ச்சி அடைந்தவர்கள்-தேர்ச்சி சதவிகிதம்-பள்ளிகளின் எண்ணிக்கை என்ற முறையில் கொடுக்கப்பட்டுள்ளது.

 
கன்னியாகுமரி: 23450 - 22050 - 94.03 - 195
திருநெல்வேலி: 34645 - 32777 - 94.61 - 259
தூத்துக்குடி: 19020 - 18157 - 95.46 - 153
ராமநாதபுரம்: 14596 - 13024 - 89.23 - 107
சிவகங்கை: 14470 - 13287 - 91.82 - 121
விருதுநகர்: 21224 - 20348 - 95.87 - 173
தேனி: 13465 - 12600 - 93.58 - 102
மதுரை: 34295 - 32159 - 93.77 - 253
திண்டுக்கல்: 20748 - 18643 - 89.76 - 160
ஊட்டி: 7756 - 6519 - 84.05 - 70
திருப்பூர்: 21836 - 20283 - 92.89 - 159
கோயம்புத்தூர்: 36070 - 33527 - 92.5 - 308
ஈரோடு: 26786 - 25254 - 94.28 - 176
சேலம்: 35996 - 32182 - 89.4 - 234
நாமக்கல்: 30228 - 28537 - 94.41 - 175
கிரிஷ்ணகிரி: 19618 - 16319 - 83.18 - 134
தர்மபுரி: 19549 - 16855 - 86.22 - 123
புதுக்கோட்டை: 17146 - 14909 - 86.95 - 122
கரூர்: 10025 - 9126 - 91.03- 83
அரியலூர்: 7746 - 5805 - 74.94 - 58
பெரம்பலூர்: 7839 - 7101 - 90.59 - 58
திருச்சி: 29776 - 27923 - 93.78 - 201
நாகப்பட்டினம்: 17525 - 14843 - 84.7 - 108
திருவாரூர்: 13464 - 11112 - 82.53 - 97
தஞ்சாவூர்: 27181 - 24471 - 90.03 - 184
விழுப்புரம்: 34977 - 27292 - 78.03 - 228
கடலூர்: 28765 - 21058 - 73.21 - 182
திருவண்ணாமலை: 26425 - 18474 - 69.91 - 170
வேலூர்: 41061 - 33311 - 81.13 - 291
காஞ்சிபுரம்: 42102 - 35675 - 84.73 - 292
திருவள்ளூர்: 37837 - 32308 - 85.39 - 278
சென்னை: 51281 - 47086 - 91.82 - 406
புதுச்சேரி: 12552 - 11071 - 88.2 - 107
ஆந்திரப்பிரதேசம்: 43 - 43 - 100 - 1
துபாய்: 16 - 16 - 100 - 1



இன்று பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகிவிட்டன. இதில் தேர்ச்சி பெரும் மாணவர்கள், தேர்ச்சி பெறாத மாணவர்கள் , நல்ல மதிப்பெண் பெரும் மாணவர்கள், மதிப்பெண் பெறாத மாணவர்கள் அனைவருக்கும் நம் வாழ்த்துகள். 

மாணவர்களை மருத்துவர் மற்றும் பொறியாளராக மட்டுமே ஆக்க வேண்டும் என்ற கனவில் வாழும் பெற்றோர்களுக்கு எனது வருத்தங்களை தெரிவித்துக் கொள்கிறேன். தேர்ச்சி பெரும், தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு பல வாய்ப்புகள் காத்திருக்கிறது. தமிழ் நாட்டை வளம் மிக்க நாடாக உருவாக்க வெறும் மருத்துவம், பொறியியல் மட்டுமே போதுமானது அல்ல. 
மாணவச் செல்வங்கள் விவசாயம், கால்நடை மருத்துவம், தொழிற் கல்வி, வணிகம், சட்டம் , ஏற்றுமதி, ஊடகம், அரசியல் படிப்பு, சமூக உழைப்பு, கலைப் படைப்பு, கல்வித் துறை மேலாண்மை போன்ற படிப்புகளில் ஆர்வம் காட்டினால் வளமான தமிழகம் உருவாகும் என்பதில் ஐயமில்லை. அதை பெற்றோர்களும் உணர்ந்து மாணவச் செல்வங்களை ஊக்குவிக்க வேண்டும். 

PG TRB - 2013 Announcement published...


விண்ணப்பங்கள் வழங்கப்படும் நாள் : மே 30 - 2013
விண்ணப்பிக்க கடைசி தேதி : சூன் 16 - 2013
தேர்வு நாள் : 21-07-2013
மொத்த பணியிடங்கள் :  2881
TRB website traffic காரணமாக open ஆகவில்லை...

தகவல் : கல்விச்சோலை.. 

Saturday, May 4, 2013

TNTET 2013 எதிர்பார்ப்பு....

ஆசிரியர் தகுதி தேர்வான, டி.இ.டி., தேர்வு குறித்த அறிவிப்பு, அடுத்த வாரம் வெளியாகும்' என, கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன கடந்த ஆண்டு ஜூலை மற்றும் அக்டோபரில் நடந்த,ஆசிரியர் தகுதி தேர்வுகள் மூலம், 22 ஆயிரத்து 500 பேர், ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டனர். இன்னும், 20 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப வேண்டி உள்ளது. இதற்காக, அடுத்த, டி.இ.டி., தேர்வு குறித்த அறிவிப்பை, பட்டதாரிகள் எதிர்பார்த்தபடி உள்ளனர். அடுத்த தேர்வை நடத்துவது குறித்து முடிவு செய்யப்பட்டு விட்டதாகவும், இது குறித்த அறிவிப்பு, அடுத்த வாரம் வெளியாகும் எனவும், கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டைப்போல், ஜூலையில் தேர்வு நடக்கலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே, தகுதி மதிப்பெண்கள் அளவை குறைக்க வேண்டும் என, சட்டசபையில், பல்வேறு கட்சிகளின் எம்.எல்.ஏ.,க்கள், வலியுறுத்தினர். இதுகுறித்து, முதல்வர் பரிசீலனை செய்து,முடிவை அறிவிப்பார் என, உயர்கல்வி அமைச்சர் பழனியப்பன் தெரிவித்திருந்தார். எனவே, இது தொடர்பாக, முதல்வரின் அறிவிப்பையும், பட்டதாரிகள் எதிர்பார்த்தபடி உள்ளனர்.

தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத (Aided School Teachers) 32 பேருக்கு ஆசிரியர் பணி வழங்க உத்தரவு , 2015 க்குள் தகுதித் தேர்வில் தேர்ச்சி அடையவும் ஆணை


TN HSS Results 2013 - May 9


Thursday, May 2, 2013

முன்னணி பொதுத் துறை வங்கிகளில் ஸ்பெஷல் ஆபிஸர் போஸ்டிங்!


சென்டிரல் பேங்க், விஜயா பேங்க், சிண்டிகேட் பேங்க் உள்ளிட்ட முன்னணி பொதுத் துறை வங்கிகளில் 70 சிறப்பு அதிகாரி பணிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

இது பற்றிய விவரம் வருமாறு:–

சென்டிரல் பேங்க்
சென்டிரல் பேங்க் ஆப் இந்தியா வங்கி பிரபல பொதுத்துறை வங்கியாகும். இதன் கிளைகளில் மொத்தம் 37 சிறப்பு அதிகாரி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. டீலர், ரிசர்ச் அனலிஸ்ட், ஆர்கிடெக்ட், சிவில் என்ஜினீயர்ஸ், எலக்ட்ரிக்கல் என்ஜினீயர் போன்ற பிரிவில் இந்த அதிகாரி பணியிடங்கள் உள்ளன.

other links