tet books

time


follow me on fb

Wednesday, May 8, 2013

பன்னிரண்டாம் வகுப்பு மறுகூட்டல் விண்ணப்பிக்க வழிமுறைகள் என்ன?

+2 விடைத்தாள் மறு கூட்டல் : மே-10 முதல் ஆரம்பம்.. ..

மார்ச் 2013 பிளஸ்-2 தேர்வு எழுதிய மாணவர்கள் விடைத் தாள் நகல் பெறவும், மறு கூட்டலுக்கும் மே 10-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுகள் இயக்குநர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அரசு தேர்வுகள் இயக்கநர் வெளியிட்டுள்ள செய்தியில்:

பிளஸ்-2 தேர்வு எழுதிய மாணவர்கள் விடைத் தாள் நகலைப் பெறவும், மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்கவும் மே 10-ம் தேதி முதல் மே 13-ம் தேதி வரை www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். ஒவ்வொரு பாடத்துக்கும் தனித் தனியாக விண்ணப்பிக்க வேண்டும்.ஆன்-லைன் மூலமே விடைத் தாள் நகலை மாணவர்கள் பெற்றுக் கொள்ளலாம் என்பதோடு, மறுகூட்டல் முடிவுகளையும் அறிந்து கொள்ளலாம். இதற்கு விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பிக்கும்போது பதிவிறக்கம் செய்த ஒப்புகைச் சீட்டை மாணவர்கள் பத்திரமாக வைத்திருக்க வேண்டும். அதிலுள்ள விண்ணப்ப எண்ணைப் பயன்படுத்தியே நகலை பதிவிறக்கம் செய்ய முடியும்.
கட்டணம் எவ்வளவு? விடைத்தாள் நகல் பெற மொழிப் பாடங்களுக்கு தலா ரூ. 550-ம், பிற பாடங்களுக்கு தலா ரூ. 275-ம் கட்டணம் செலுத்த வேண்டும்.மறு கூட்டலுக்கு விண்ணப்பிப்போர் மொழிப் பாடம் மற்றும் உயிரியல் பாடங்களுக்கு தலா ரூ. 305-ம், பிற பாடங்களுக்கு தலா ரூ. 205 கட்டணம் செலுத்த வேண்டும்.இந்த கட்டணத்தை இணைய தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்த சலான் மூலம் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கிக் கிளைகளில் செலுத்த வேண்டும்.

மறுமதிப்பீடு: மாணவர்கள் விடைத்தாள் நகலைப் பெற்ற பிறகே, மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க முடியும்.மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் மொழிப் பாடங்களுக்கு தலா ரூ. 1010-ம், பிற பாடங்களுக்கு தலா ரூ. 505-ம் கட்டணம் செலுத்த வேண்டும்.மதிப்பெண் சான்றிதழ்: பிளஸ்-2 தேர்வு எழுதிய மாணவர்கள் அந்தந்த பள்ளிகளிலும், தனித் தேர்வர்கள் தேர்வு எழுதிய மையங்களிலும் மே 27-ம் தேதியன்று மதிப்பெண் சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம்.சிறப்பு அனுமதித் திட்டத்தின் கீழ் (தட்கல்) விண்ணப்பித்து, தேர்வு எழுதிய தனித் தேர்வர்களுக்கு தபால் மூலம் அவர்களுடைய வீட்டு முகவரிக்கு மதிப்பெண் சான்றிதழ்கள் அனுப்பி வைக்கப்படும்.

0 தங்களின் கருத்து பதிவிற்கு இங்கே சொடுக்கவும்...:

Post a Comment

தங்களின் கருத்துக்கள் வரவேற்க படுகின்றன

other links