tet books

time


follow me on fb

Sunday, May 12, 2013

TNPSC தமிழுக்கு முக்கியத்துவம் எந்த அளவு!


குரூப்-2 மெயின் தேர்வில் பொதுத் தமிழ்ப் பாடம் மீண்டும் சேர்ப்பு
குரூப்-4 தேர்வில் பொதுத் தமிழ்ப் பாடத்துக்கு மீண்டும் 100 மதிப்பெண்கள்
விஏஓ தேர்வில் பொதுத் தமிழ்ப் பாடத்துக்கு 80 மதிப்பெண்கள்
விஏஓ தேர்வில் அடிப்படை கிராம நிர்வாகப் பகுதியில் வினா எண்ணிக்கை குறைப்பு
குரூப்-1 தேர்வில் எந்த மாற்றமும் இல்லை


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் பல்வேறு தேர்வுகளுக்கான பாடத்திட்டங்களில் மாற்றங்கள் செய்து அண்மையில் அறிவிக்கப்பட்டன. அந்தப் பாடத்திட்டங்களில் பொதுத் தமிழுக்கான முக்கியத்துவம் குறைக்கப்பட்டதாக எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து, ஏற்கெனவே திருத்தம் செய்த பாடத்திட்டங்களில் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் மீண்டும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

“பழைய பாடத்திட்டத்தை மாற்றி புதிய பாடத்திட்டம் கடந்த மார்ச் 12-ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதில் தமிழுக்கு முக்கியத்துவம் இல்லை என்ற கருத்து எழுந்தது. இதைத் தொடர்ந்து மார்ச்சில் வெளியிடப்பட்ட பாடத் திட்டங்களை மீண்டும் ஆய்வு செய்து தமிழுக்கு உரிய முக்கியத்துவம் அளித்து, திருத்தங்களையும் செய்துள்ளோம். குரூப்-2, குரூப்-2ஏ, குரூப்-3, குரூப்-3ஏ, குரூப்-4, விஏஓ ஆகிய ஆறு தேர்வுகளுக்கான பாடத்திட்டங்கள் திருத்தி அமைக்கப்பட்டுள்ளன” என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தலைவர் நவநீதகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். “குரூப்-2 முதன்மைத் தேர்வில் ‘டிராப்ட்டிங்’ என்ற பகுதி புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளது. துணை வணிகவரி அதிகாரி, நகராட்சி கமிஷனர் போன்ற முக்கியப் பதவிகளுக்கு வருபவர்கள் கருத்துகளை கோர்வையுடன் அறிக்கையாகத் தயாரிக்கும் திறனைப் பெறுவது அவசியம். அந்த நோக்கத்தில் இந்தப் பகுதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது” என்கிறார் அவர்.

குரூப்-1 தேர்வில் புதிதாக எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. குரூப்-2 (நேர்முகத் தேர்வு உள்ள பணி) முதல்நிலைத் தேர்வு , குரூப்-2ஏ (நேர்முகத் தேர்வு அல்லாத பணி), குரூப்-3, குரூப்-3ஏ, குரூப்-4 ஆகிய பணிகளுக்கான தேர்வு முறையில் பொதுத் தமிழ் அல்லது பொது ஆங்கிலத்துக்கு (எஸ்எஸ்எல்சி தரத்தில்) மேலும் முக்கியத்துவம் தரும் வகையில் அத்தேர்வு 100 வினாக்கள் கொண்டதாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

கிராம நிர்வாக அலுவலர் (விஏஓ) பணிக்கான தேர்வு முறை பொதுத் தமிழ் மற்றும் பொது ஆங்கிலம் ஆகியவற்றில் 30 வினாக்களுக்குப் பதிலாக 80 வினாக்கள் கொண்டதாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.  பொதுத்தாளில் 100 வினாக்களுக்குப் பதிலாக 75 வினாக்களும், அடிப்படை கிராம நிர்வாகப் பகுதியில் 50 வினாக்களுக்குப் பதிலாக 25 வினாக்களும் கொண்டு வரப்பட்டுள்ளன. திறனறித் தேர்வுக்கான 20 வினாக்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. தற்போது நடைமுறையில் உள்ளபடி தேர்வு எழுதுபவர்கள் அனைவரும் ஆங்கிலம் அல்லது தமிழில் தேர்வு எழுத அனுமதிக்கப்படுகிறார்கள். திருத்தப்பட்ட பாடத்திட்டத்தில் தமிழ் மொழிக்கு உரிய முக்கியத்துவம் அதிகரிக்கப்பட்டுள்ளது.


குரூப்-2 (நேர்முகத் தேர்வு உள்ள பணி) :

இந்தப் பணிக்கான மெயின் தேர்வில் பொது அறிவுப் பாடத்தில் 75 கேள்விகள் கேட்கப்படும். திறன் அறிதல் மற்றும் கூர்ந்து ஆய்வு செய்தல் (ஆப்டிட்யூட் அண்ட் மெண்டல் எபிலிட்டி) பிரிவில் 25 கேள்விகள் (எஸ்எஸ்எல்சி தரத்தில்) கேட்கப்படும். பொதுத் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் (எஸ்எஸ்எல்சி தரத்தில்) 100 கேள்விகள் கேட்கப்படும். குரூப்-2 மெயின் தேர்வில் பகுதி-ஏ பிரிவில் 125 கேள்விகள் அப்ஜெக்ட்டிவ் முறையில் கேட்கப்படும். இப்பகுதிக்கு விடையளிக்க இரண்டு மணி நேரம் அளிக்கப்படும். இதற்கான மதிப்பெண்கள் 125. பகுதி-பி பிரிவில் கட்டுரைப் பகுதியில் இரண்டு கேள்விகள் கேட்கப்படும். இப்பகுதிக்கு விடையளிக்க ஒரு மணி நேரம் வழங்கப்படும். இதற்கு 75 மதிப்பெண்கள் வழங்கப்படும்.


குரூப்-2ஏ (நேர்முகத் தேர்வு அல்லாத பணி) :

மெயின் தேர்வில் பொது அறிவுப் பகுதியில் 75 கேள்விகள் கேட்கப்படும். திறன் அறிதல் மற்றும் கூர்ந்து ஆய்வு செய்தல் பகுதிக்கு (எஸ்எஸ்எல்சி தரத்தில்) 25 கேள்விகள் கேட்கப்படும். பொதுத் தமிழ் அல்லது பொது ஆங்கிலம் (எஸ்எஸ்எல்சி தரத்தில்) பகுதியில் 100 கேள்விகள் கேட்கப்படும். இந்த மூன்று மணி நேரத் தேர்வுக்கு மொத்தம் 300 மதிப்பெண்கள் வழங்கப்படும்.


குரூப்-3 :

மெயின் தேர்வில் அப்ஜெக்டிவ் முறையில் கேள்விகள் கேட்கப்படும். மூன்று மணி நேரம் நடைபெறும் இந்தத் தேர்வுக்கு 300 மதிப்பெண்கள் வழங்கப்படும். பொது அறிவுப் பகுதியில் 75 கேள்விகள் கேட்கப்படும். திறன் அறிதல் மற்றும் கூர்ந்து ஆய்வு செய்தல் பகுதிக்கு (எஸ்எஸ்எல்சி தரத்தில்) 25 மதிப்பெண்கள் வழங்கப்படும். பொதுத் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் (எஸ்எஸ்எல்சி தரத்தில்) 100 கேள்விகள் கேட்கப்படும்.

குரூப்-3ஏ :

மெயின் தேர்வில் அப்ஜெக்டிவ் முறையில் கேள்விகள் கேட்கப்படும். மூன்று மணி நேரம் நடைபெறும் இந்தத் தேர்வுக்கு 300 மதிப்பெண்கள் வழங்கப்படும். பொது அறிவு பகுதியில் 75 கேள்விகள் கேட்கப்படும். திறன் அறிதல் மற்றும் கூர்ந்து ஆய்வு செய்தல் பகுதிக்கு (எஸ்எஸ்எல்சி தரத்தில்) 25 மதிப்பெண்கள் வழங்கப்படும். பொதுத் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் (எஸ்எஸ்எல்சி தரத்தில்) 100 கேள்விகள் கேட்கப்படும்.


குரூப்-4 :

மெயின் தேர்வில் அப்ஜெக்டிவ் முறையில் கேள்விகள் கேட்கப்படும். மூன்று மணி நேரம் நடைபெறும் இந்தத் தேர்வுக்கு 300 மதிப்பெண்கள் வழங்கப்படும். பொது அறிவுப் பகுதியில் 75 கேள்விகள் கேட்கப்படும். திறன் அறிதல் மற்றும் கூர்ந்து ஆய்வு செய்தல் பகுதிக்கு (எஸ்எஸ்எல்சி தரத்தில்) 25 மதிப்பெண்கள் வழங்கப்படும். பொதுத் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் (எஸ்எஸ்எல்சி தரத்தில்) 100 கேள்விகள் கேட்கப்படும்.

விஏஓ தேர்வு :

அப்ஜெக்ட்டிவ் முறையில் கேள்விகள் கேட்கப்படும். மூன்று மணி நேரம் நடைபெறும் இந்தத் தேர்வுக்கு மொத்தம் 300 மதிப்பெண்கள் வழங்கப்படும். பொது அறிவுப் பகுதியில் 75 கேள்விகள் கேட்கப்படும். கிராம நிர்வாக அடிப்படைகள் குறித்து 25 வினாக்கள் கேட்கப்படும். திறன் அறிதல் மற்றும் கூர்ந்து ஆய்வு செய்தல் பகுதிக்கு (எஸ்எஸ்எல்சி தரத்தில்) 20 மதிப்பெண்கள் வழங்கப்படும். பொதுத் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் (எஸ்எஸ்எல்சி தரத்தில்) 80 கேள்விகள் கேட்கப்படும்.


நன்றி... புதிய தலைமுறை கல்வி 

0 தங்களின் கருத்து பதிவிற்கு இங்கே சொடுக்கவும்...:

Post a Comment

தங்களின் கருத்துக்கள் வரவேற்க படுகின்றன

other links