tet books

time


follow me on fb

Thursday, July 25, 2013

செவிலியர் சான்றிதழ்களை தமிழக அரசின் செவிலியர் இணையத்தில் பதிவு செய்வது அவசியம்!

http://www.tamilnadunursingcouncil.com/

தமிழகத்தில் செவிலியராக பயிற்சி பெற்றவர்கள் அவர்களின் சான்றிதழ்களை மேற்கண்ட செவிலியர் கழகத்தின் இணைய தளத்தில் தங்களின் சான்றிதழ்களை பதிவு செய்வதும் புதுப்பிப்பதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்கான வங்கி கட்டணம் 350 செலுத்து வேண்டும்.

வழிமுறைகள்
இந்தியன் நர்ஸிங் கவுன்சில் வழிகாட்டுதலின்படி ஜூலை 2013 முதல் நர்ஸிங் பதிவு புதுப்பித்தல் கட்டாயமாக்கட்டுப்பள்ளது. இது அனைத்து வகை நர்ஸிங் பதிவுகளுக்கும் பொருந்தும் (RN / RM / ANM – MPHW / HV) 21 ஆகஸ்ட் 1998 க்குப் பிறகு RN / RM பதிவு செய்தவர்கள் NM தெரிவு செய்து தங்கள் RN நம்பரை பதியவும்.
1. ஜூலை 2013 முதல் நர்ஸிங் பதிவு புதுப்பித்தல் கட்டாயம் செய்ய வேண்டும்.
2. பதிவு புதுப்பித்தல் தொடங்கும் முன், தயவு செய்து தங்கள் வசதிக்காக அளிக்கப்பட்டுள்ள டெமோ வீடியோவை பார்க்கவும்.
3. பதிவு புதுப்பித்தல் தொடங்கும் முன், தயவு செய்து கீழ்க்காணும் அசல் ஆவணங்களை ஸ்கேன் செய்து கொள்ளவும். ஸ்கேன் செய்த ஒவ்வொரு ஆவணங்களின் ஃபைல் சைஸ் 3MB க்கு மிகாமல் பார்த்துக் கொள்ளவும். தாங்கள் கீழே உள்ள அசல் சான்றிதழ்களை ஸ்கேன் செய்து அனுப்பவும்.
a. தங்கள் RN / RM / ANM – MPHW / HV சான்றிதழ்.
b. தற்போதைய உத்தியோகத்தின் வேலை நியமன சான்றிதழ்.
c. தங்கள் தற்போதைய பாஸ்போர்ட் அளவு புகைப்படம்.
d. அசல் சான்றிதழை ஸ்கேன் செய்யவும்.
4. தங்கள் TNNC எண் மற்றும் நர்ஸிங் பதிவு வகை (RN / RM / ANM – MPHW / HV) பதிவு செய்தவுடன், தங்கள் பெயர் காட்டப்படும். தங்கள் பெயர் காட்டப்படாவிடில், தயவு செய்து சரியான பதிவு வகையை தெரிவு செய்து மறுமுயற்சி செய்யவும் அல்லது 044 - 4352 4504 எண்ணை தொடர்பு கொள்ளவும்.
5. தங்கள் கட்டணத்தை ஆன்லைனிலோ (கிரடிட் கார்டு, டெபிட் கார்டு, நெட் பேங்கிங்) அல்லது ஆஃப்லைனிலோ செலுத்தலாம்.
6. ஆஃப்லைனில் செலுத்துவோர், தயவு செய்து மறக்காமல் செலான் அச்சடித்து எடுத்துக் கொள்ளவும்.
7. வங்கியில் ஒரு அடிச்சீட்டை வைத்துக்கொண்டு, 2 அடிச்சீட்டை தங்களிடம் அளிப்பார்கள். தாங்கள் 2 அடிச்சீட்டையும் தங்களிடமே வைத்துக்கொள்ளவும். கவுன்சிலுக்கு அனுப்ப தேவையில்லை.
8. தயவு செய்து ஒப்புதல் அட்டையை மறக்காமல் அச்சடித்துக்கொள்ளவும்.
9. ஆஃப்லைன் கட்டணம் செலுத்துவோர், தயவு செய்து தங்கள் பதிவு புதுப்பித்தலை காலை 8 மணியிலிருந்து மாலை 8 மணி வரை மாத்திரம் புதுப்பிக்கவும்.

0 தங்களின் கருத்து பதிவிற்கு இங்கே சொடுக்கவும்...:

Post a Comment

தங்களின் கருத்துக்கள் வரவேற்க படுகின்றன

other links