tet books

time


follow me on fb

Saturday, April 29, 2017

Collection of TNTET materials from whats app

https://drive.google.com/drive/mobile/folders/0B8HRDFaYJD3-ZG93Q2ZzNTZlSWs

Friday, March 10, 2017

Update your details who passed TNTET 2012,2013,2014

TNTET 2012,2013,2014. தேர்ச்சி பெற்றோர் தம் விவரங்களை சரிபார்த்து update செய்து கொள்ளவும்.

http://tetupdation.examsonline.co.in/

வழிமுறைகள்
குறிப்பு: கணினியில் மட்டுமே update செய்ய முடியும்.

1. கீழ்கண்ட இணைய பக்கத்திற்கு சென்று தங்களின் Roll no தெரிந்தால் உள்ளிடவும்.
( அல்லது ) தங்களின் பெயர் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளிட்டு அதன் கீழ் தெரியும் security key உள்ளிட்டு login செய்யவும்.

பெயர் உள்ளிட all caps உபயோகிக்கவும் , பெயரை உள்ளிட்டு initial ஐ பின்னால் space விட்டு இட வேண்டும்.  உதாரணம் . MOHAN K

2. Login ஆனதும் உங்கள்  முந்தைய தேர்விற்கான  அனைத்து விவரங்களும் தெரியும் , தங்கள் முந்தைய சான்றிதழ் சரிபார்ப்பில்  நீங்கள் அளித்த விவரங்கள் , மதிப்பெண்கள் சரியாக உள்ளனவா? என ஆராயவும். ஏதேனும் மாற்றம் செய்ய வேண்டுமெனில் கீழே update எனும் பொத்தானை அழுத்தவும். ( மாற்றம் இன்றி இருப்பினும் அதனை அழுத்தவும்)

3. அடுத்த பிரிவில் தங்கள் மதிப்பெண் விவரங்களை மட்டும் மாற்றும் படி option வரும், TET மதிப்பெண் மற்றும் உங்கள் பெயரை மாற்ற முடியாது. பிறந்த தேதி மாற்றலாம். அதில் மாற்ற கூடிய பகுதிகளை மட்டும் மாற்றி பின் next கொடுக்கவும்.
4. அடுத்து ஆதாரம் எண் கேட்கும் உங்கள் 12 இலக்க ஆதாரம் எண் உள்ளிட வும். இல்லை எனில் skip செய்யவும்.
5. அடுத்து உங்கள் புகைப்படம் கையொப்பம் கேட்கும் அதனை 50kb அளவில் உள்ளிட வேண்டும். TNPSC க்கு பதிவு செய்யும்படியாக , Photo 3.5*4.5 cm 72 pixl/cm resolution இருந்தால் போதும்.  Signature 3.5*1.5 72pixl/cm இருந்தால் போதும்.

6. அதனை upload செய்தவுடன் அடுத்த பக்கத்தில் Registration no with QR code , உங்கள் photo, sign உடன் ஒரு பக்கம் வரும் அதனை print செய்து கொள்ளவும்.

தற்போதுதான்  தங்களின் registration முடிவடைந்ததாக பொருள்.

முக்கியம்; மேற்கண்ட செயல்முறையை (update) ஒரு முறை மட்டுமே செய்யமுடியும். எனவே photo, sign ,aadhar no போன்றவற்றை உடன் வைத்துக்கொண்டு பின் update procedure மேற்கொள்ளவும்.

#TNTET2017 #tntet2012blogspotin

Thursday, February 23, 2017

TNTET 2017 Exam date

ஆசிரியர் தகுதி தேர்வு (TNTET 2017)
PAPER-1 : ஏப்ரல் 29.
PAPER-2  : ஏப்ரல் 30
தேதிகளில் நடைபெரும் அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு.

Thursday, February 16, 2017

TNTET 2017 விண்ணப்பங்கள் விரைவில்.

TNTET 2017 க்கான விண்ணப்பங்கள் விரைவில் விற்பனைக்கு வர உள்ளன.

வழக்கமாக உயர்நிலை, மேனிலைப்பள்ளிகளில்  நடந்துவந்த  விண்ணப்பங்களுக்கான  விற்பனை 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொது தேர்வுகளை கருத்தில் கொண்டு இந்த முறை ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் ( தொடக்க/நடுநிலை) விற்பனை செய்யப்பட உள்ளது.

TNTET 2017 தேர்வானது  ஏப்ரல் இறுதி அல்லது மே முதல் வாரம் நடை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்ற தேர்வுகளில் ஒரு விண்ணப்பத்தின்  விலை ரூ.500 என இருந்தது குறிப்பிடத்தக்கது.

Thursday, February 9, 2017

TNTET 2017 Application


நம்பாதீர்கள்... நம்பி ஏமாறாதீர்கள்...

ஆசிரியர் தேர்வு எழுத நீங்கள் காட்டும் ஆர்வத்தை பயன்படுத்தி சில நாளிதழ்கள் நாளை முதல் தேர்வுக்கான விண்ணப்பங்கள் பள்ளிகளில் விநியோகப்படும் என்று செய்தி வெளியிட்டுள்ளன.

அத்தகைய செய்தியை நம்பி நாளை காலை குறிப்பிட்ட பள்ளிக்கு சென்று தேர்வு விண்ணப்பம் வேண்டும் என்று நிற்காதீர்கள். அவர்கள் இன்னும்  விண்ணப்பம் வரவில்லை என்று சொன்னால் அது உங்களுக்கு ஏமாற்றம் அளிக்க கூடியதாக இருக்கும்.

உண்மையில் இதுவரை ஆசிரியர் தகுதி தேர்வு பற்றிய எந்த முறையான அறிவிப்பையும் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிடவில்லை.

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் முறையான அறிவிப்பு தினத்தந்தி போன்ற நாளிதழ்களில் முறையாக வெளியிடப்படும். அதன்பிறகு ஒரு வாரத்தில் குறிப்பிட்ட பள்ளி மையங்களில் விண்ணப்பங்கள் விற்பனை செய்வார்கள்.

இதுவரை ஆசிரியர் தேர்வு வாரியத்தால் முறையான அறிவிக்கை வெளியிடப்படாத காரணத்தால் நாளை விண்ணப்பம் வாங்க எங்கும் செல்லாமல் படிக்கும் பணியை மட்டும் கவனியுங்கள்

Regards Alla Bagash @fb

Friday, February 3, 2017

TNTET 2017 தேர்விற்கு தயாராவது எவ்வாறு?

#TET தேர்விற்கு எவ்வாறு தயார் ஆவது?

திட்டம் 1:
1.   மிக அலட்சியமாக படிக்க கூடாது.
2. தற்போது நாம் படிப்பது தான் இத்தனை வருடங்களாக நாம் படித்ததின் இறுதி அத்தியாயம் என்பதை உணருங்கள்.
3.  குறிப்பாக இனி ஒரு வாய்ப்பு கிடையாது. அப்படியே கிடைத்தாலும் நான் அதை பயன்படுத்த முயற்சிக்க மாட்டேன். இதுவே எனது இறுதி முயற்சி. என முடிவு செய்து இதில் நான் அதிக மதிப்பெண் பெற்று என்னுடைய பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள், சமூகம், அரசு அனைத்திற்கும் எனது உண்மையான திறமையை உணர வைப்பேன் என உறுதி எடுத்துக்கொள்ளுங்கள்.

திட்டம் 2
1.   தாள் 1 ல் தேர்ச்சி பெற விரும்புபவர்கள் கீழ்கண்டவாறு படிக்க வேண்டும்

1 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை உள்ள பாடபுத்தகங்கள் – 100 சதவீதம் ஆழ்ந்து படிக்க வேண்டும்.

11 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள பாடபுத்தகங்கள் – 25 சதவீதம் கழுகுப்பார்வையில் மேம்போக்காக படிக்க வேண்டும்.

ஆசிரியர் பயிற்சியின் போது படித்த உளவியல், கற்பிக்கும் முறைகள் மற்றும் உள்ள இதர புத்தகங்களை 70 சதவீதம் ஆழந்து படிக்க வேண்டும்.

இதே தலைப்பில் உள்ள பி.எட் மற்றும் எம்.எட் புத்தகங்களை 20 சதவீதம் மட்டுமே உழைத்து ஆரம்ப நிலையில் ஒருமுறையும் தேர்வுக்கு முந்தைய வாரத்தில் ஒருமுறையும் படிக்க வேண்டும்.

2.   தாள் 2 ல் தேர்ச்சி பெற விரும்புபவர்கள் கீழ்கண்டவாறு படிக்க வேண்டும்

4 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை உள்ள பாடபுத்தகங்கள் – 100 சதவீதம் ஆழ்ந்து படிக்க வேண்டும்.

11 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள பாடபுத்தகங்கள் – 50 சதவீதம் கழுகுப்பார்வையில் மேம்போக்காக படிக்க வேண்டும்.

ஆசிரியர் பயிற்சியின் போது படித்த உளவியல், கற்பிக்கும் முறைகள் மற்றும் உள்ள இதர புத்தகங்களை 70 சதவீதம் ஆழந்து படிக்க வேண்டும்.

இதே தலைப்பில் உள்ள பி.எட் மற்றும் எம்.எட் புத்தகங்களை 60 சதவீதம் மட்டுமே உழைத்து ஆரம்ப நிலையில் ஒருமுறையும், நடுவில் ஒருமுறையும், தேர்வுக்கு முந்தைய வாரத்தில் ஒருமுறையும் படிக்க வேண்டும்.

Thursday, February 2, 2017

TNTET Review

ஆசிரியர்  தகுதி தேர்வு - சிறப்பு பார்வை

முதல் தேர்வு (1 முதல் 5-ம் வகுப்பிற்கானது)
இரண்டாவது தேர்வு (6 முதல் 8 ம் வகுப்பிற்கானது)

இலவச மற்றும் கட்டாயக் கல்விக்கான குழந்தைகளின் உரிமைச் சட்டம் (RTE ) 2009 ன் பிரிவு 23, உப பிரிவு (1) ல் குறிப்பிட்டுள்ளபடி, ஆசிரியக் கல்விக்கான தேசியக் குழுமம் (NCTE ) 2010 – ஆகஸ்டு 23 –ம் தேதி வெளியிட்ட குறிப்பாணையில் 1 முதல் 8 ம் வகுப்பு வரை கற்றுக் கொடுக்க ஆசிரியர்களாக தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு குறைந்தபட்ச தகுதிகளாக சிலவற்றை வரையறுத்துள்ளது.

RTE சட்டம் பிரிவு 2 ன் படி ஆசிரியராக நியமிக்கப்படும் ஒருவருக்கு மிக முக்கிய தகுதியாக எதிர்ப்பார்க்கப்படுவது என்னவென்றால் அந்தந்த மாநில அரசுகள் நடத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வில் (TET ) தேர்ச்சியடைந்திருப்பது அவசியம்.

ஆசிரியராக நியமிக்கப்பட இருக்கும் ஒருவருக்கு ஆசிரியர் தகுதித் தேர்வை (TET ) குறைந்தபட்சத் தகுதியாக வைத்திருப்பதன் காரணங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

தகுதியான ஆசிரியர்களைத் தேர்ந்தெடுக்கும் நடைமுறையில் ஒரு தேசிய தரத்தையும் அடையாளத்தையும் கடைப்பிடிக்க.
ஆசிரியப் பயிற்சி நிறுவனங்களும், மாணவர்களும் தங்களுடைய செயல்திறனை மேலும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதை உணர்வுபூர்வமாக உணர்த்த.
அரசானது ஆசிரியர்களின் தரத்தில் மிகவும் கவனமாக இருக்கிறது என்பதை அனைவருக்கும் உணர்த்த. அந்தந்த அரசால் நியமிக்கப்படும் வல்லுநர் குழுவால் இந்தத் தேர்வானது நடத்தப்படும்.

கீழ்க்கண்ட வழிகாட்டுதல்களின்படி இத்தேர்வானது நடத்தப்படும்.

தகுதி:-

கீழ்க்கண்ட நபர்கள் இந்த TET தேர்வை எழுதத் தகுதியானவர்கள்:

ஆசிரியப் பயிற்சிக்கான தேசியக் குழுமம் 2010 ஆகஸ்ட் 23 –ந் தேதி வெளியிட்ட குறிப்பாணையின்படி, ஒரு நபர் தேவையான கல்வித் தகுதியையும், தொழிற்கல்வித் தகுதியையும் பெற்றிருக்க வேண்டும்.

ஆசிரியப் பயிற்சிக்கான தேசியக் குழுமம் 2010 ஆகஸ்ட் 23 –ந் தேதி வெளியிட்ட குறிப்பாணையின்படி, ஒரு நபர் (NCTE) குழுமம் குறிப்பிட்டுள்ள ஏதேனும் ஒரு ஆசிரியப் பயிற்சியை முடித்திருக்க வேண்டும்.

RTE சட்டம் பிரிவு 23 உப பிரிவு 2 –ன் கீழ் ஒரு மாநில அரசு அல்லது யூனியன் பிரதேச அரசு, இந்த TET தேர்வை எழுதுவதற்கான தகுதிகளிலிருந்து சில விலக்குகளை அளிக்க விரும்பினால் RTE சட்டம் பிரிவு 23 உப பிரிவு 2 –ன் கீழ் அளித்துக் கொள்ளலாம். இந்த விதிவிலக்குகள் மத்திய அரசினால் உப பிரிவின் கீழ் ஒரு குறிப்பாணையாக வெளியிடப்படும்.

TET-ன் அமைப்பு மற்றும் பொருளடக்கம்:-

ஆசிரியர் தகுதித் தேர்வின் (TET) அமைப்பு மற்றும் பொருளடக்கம் கீழ்வரும் பத்திகளில் கொடுக்கப்பட்டுள்ளது. எல்லாக் கேள்விகளும் சரியான பதிலை தேர்ந்தெடுத்து எழுதும் வகைக் கேள்விகளே. ஒவ்வொரு கேள்விக்கும் ஒரு மதிப்பெண். ஒவ்வொரு கேள்விக்கும் நான்கு பதில்கள் தரப்பட்டிருக்கும்.
அவற்றில் ஒன்று மட்டுமே சரியான பதில். தவறான பதிலுக்கு மதிப்பெண் குறைப்பது இல்லை.

தேர்வு நடத்தும் குழு கட்டாயமாக பின்வரும் அமைப்பு மற்றும் பொருளடக்கத்தை பின்பற்ற வேண்டும்.

TET இரண்டு தேர்வுகளைக் கொண்டது.

முதல் தேர்வு 1 முதல் 5 ஆம் வகுப்பிற்கு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கானது.

இரண்டாவது தேர்வு 6 முதல் 8 ஆம் வகுப்பிற்கு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கானது.

ஒருவர் 1 முதல் 5 ம் வகுப்பிற்கு கற்பிக்க இருந்தாலும், 6 முதல் 8 ம் வகுப்பிற்கு கற்பிக்க இருந்தாலும் கட்டாயமாக இரண்டு தேர்வுகளையும் எழுத வேண்டும்.

முதல் தேர்வு (1 முதல் 5-ம் வகுப்பிற்கானது)
கேள்விகள்: 150

அமைப்பு மற்றும் பொருளடக்கம் (அனைத்தும் கட்டாயம்)
(i) குழந்தை வளர்ச்சி மற்றும் அணுகுமுறை 30 கேள்விகள் 30 மதிப்பெண்கள்
(ii) மொழிப்பாடம் – 1 30 கேள்விகள் 30 மதிப்பெண்கள்
(iii) மொழிப்பாடம் – 2 30 கேள்விகள் 30 மதிப்பெண்கள்
(iv) கணிதம் 30 கேள்விகள் 30 மதிப்பெண்கள்
(v) சூழ்நிலை அறிவியல் 30 கேள்விகள் 30 மதிப்பெண்கள்

கேள்விகளின் தரமும் இயல்பும்:

முதல் தேர்வுக்கான கேள்வித்தாளை தயாரி்க்கும்போது, தேர்வு நடத்தும் குழு கீழ்க்கண்ட காரணிகளை கவனத்தில் கொள்ள வேண்டும்:

6 முதல் 11 வயது வரம்புள்ள குழந்தைகளின் கற்றல் கற்பித்தல் செயல்பாடுகளில் குழந்தை உளவியலை மையப்படுத்தி குழந்தை வளர்ச்சி மற்றும் அணுகுமுறைப் பகுதி கேள்விகள் இருக்க வேண்டும். மேலும் கற்போர்களின் புரிதல் நிலை, பல்வகைப்பட்ட கற்போர், கற்போரிடம் உரையாடுதல், ஒரு நல்ல தொகுப்பாளரின் தன்மை மற்றும் குண நலன்களையும் மையப்படுத்தி இருக்க வேண்டும்.

கற்பிக்கும் மொழியில் ஒருவருக்கு இருக்கும் புலமையை மையப்படுத்தி மொழிப்பாடம் – 1 ல் கேள்விகள் கேட்கப்படும். விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் மொழிகளில் தேர்வு எழுதுபவர் தேர்ந்தெடுத்த மொழிக்கானது.

மொழிப்பாடம் – 2 என்பது மொழிப்பாடம் – 1ஐ தவிர்த்து மற்றுமொரு மொழிக்கான தேர்வாகும். இது மொழியின் கூறுகளைப் பற்றியும், தொடர்புகொள்ளும் மற்றும் புரிந்து கொள்ளும் திறமைகளைக் கண்டறியும் தேர்வாகும்.

கணிதம் மற்றும் சூழ்நிலை அறிவியல் பகுதி கருத்துருக்களையும், பிரச்சினைகளைத் தீர்க்கும் மற்றும் புரிந்து செயல்படுத்துதல் திறமைகளையும் சோதிக்கும் பகுதியாகும். இவையனைத்துப் பாடங்களிலும் கேள்விகள் வகுப்பு 1 முதல் 5 வரையுள்ள அனைத்துப் பிரிவிலிருந்தும் கேட்கப்படும்.

முதல் தேர்வின் கேள்விகள், அந்தந்த மாநில அரசு வகுத்துள்ள பாடத்திட்டத்தில் 1 முதல் 5 வகுப்புகள் வரை இருந்தாலும், அதன் தொடர்புக் கேள்விகளும் கடினத் தன்மையும் நடுநிலை வகுப்பு வரை இருக்கலாம்.

இரண்டாவது தேர்வு (6 முதல் 8 ம் வகுப்புகளுக்கானது)
கேள்விகள்: 150

அமைப்பு மற்றும் பொருளடக்கம் அனைத்தும் கட்டாயம்

(i) குழந்தை வளர்ச்சி மற்றும் அணுகுமுறை(கட்டாயம்) 30 கேள்விகள் 30 மதிப்பெண்கள்
(ii) மொழிப்பாடம்–1(கட்டாயம்) 30 கேள்விகள் 30 மதிப்பெண்கள்
(iii) மொழிப்பாடம்–2(கட்டாயம்) 30 கேள்விகள் 30 மதிப்பெண்கள்
a. கணிதம் மற்றும் ஆசிரியர்களுக்கானது: கணிதம் மற்றும் அறிவியல் 60 கேள்விகள் 60 மதிப்பெண்கள்
b. சமூக அறிவியல் ஆசிரியர்களுக்கானது: சமூக அறிவியல் 60 கேள்விகள் 60 மதிப்பெண்கள்
c. மற்ற ஆசிரியர்களுக்கானது: 4 (a) அல்லது 4(b)

இரண்டாம் தேர்வுக்கான கேள்வித்தாளை தயாரிக்கும்போது தேர்வு நடத்தும் குழு கீழ்க்கானும் காரணிகளை கவனத்தில் கொள்ள வேண்டும்.

குழந்தை வளர்ச்சி மற்றும் அணுகுமுறைப் பகுதி கேள்விகள் 11 முதல் 14 வயது வரம்புள்ள குழந்தைகளின் கற்றல் கற்பித்தல் செயல்பாடுகளில் குழந்தை உளவியலை மையப்படுத்தி குழந்தை வளர்ச்சி மற்றும் அணுகுமுறைப் பகுதி இருக்க வேண்டும். மேலும் கற்போர்களின் புரிதல் நிலை, பல்வகைப்பட்ட கற்போர், கற்போரிடம் உரையாடுதல், ஒரு நல்ல தொகுப்பாளரின் தன்மை மற்றும் குண நலன்களையும் மையப்படுத்தி இருக்க வேண்டும்.

கற்பிக்கும் மொழியில் ஒருவருக்கு இருக்கும் புலமையை மையப்படுத்தி மொழிப்பாடம் – 1 ல் கேள்விகள் கேட்கப்படும். விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் மொழிகளில் தேர்வு எழுதுபவர் தேர்ந்தெடுத்த மொழிக்கானது.

மொழிப்பாடம் – 2 என்பது மொழிப்பாடம் – 1ஐ தவிர்த்து மற்றுமொரு மொழிக்கான தேர்வாகும். இது மொழியின் கூறுகளைப் பற்றியும், தொடர்புகொள்ளும் மற்றும் புரிந்து கொள்ளும் திறமைகளைக் கண்டறியும் தேர்வாகும்.

கணிதம், சூழ்நிலை அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பகுதி கருத்துருக்களையும், பிரச்சினைகளைத் தீர்க்கும் மற்றும் புரிந்து செயல்படுத்துதல் திறமைகளையும் சோதிக்கும் பகுதியாகும். இவையனைத்துப் பாடங்களிலும் கேள்விகள் வகுப்பு 6 முதல் 8 வரையுள்ள அனைத்துப் பிரிவிலிருந்தும் கேட்கப்படும்.

இரண்டாம் தேர்வின் கேள்விகள், அந்தந்த மாநில அரசு வகுத்துள்ள பாடத்திட்டத்தில் 6 முதல் 8 வகுப்புகள் வரை இருந்தாலும், அதன் தொடர்புக் கேள்விகளும் கடினத் தன்மையும் உயர்நிலை வகுப்பு வரை இருக்கலாம்.

கேள்வித்தாள் இரண்டு மொழிகளில் இருக்க வேண்டும்:

முதல் மொழி அந்தந்த அரசுகள் தீர்மானிக்க வேண்டும்

இரண்டாம் மொழி ஆங்கிலம்

Wednesday, February 1, 2017

TNTET2017 தேர்வுக்கான- அறிவிப்பு விவரம்

FLASH NEWS-TNTET-2017 -TET தேர்வுக்கான- அறிவிப்பு விவரம்

விண்ணப்பங்களின்விற்பனை துவக்கம் - 15.02.2017

விண்ணப்பங்களின்விற்பனை முடிவு - 08.03.2017

TNTET Paper 1 தேர்வு - 29.04.2017

TNTET Paper 2 தேர்வு - 30.04.2017

PG TRB தேர்வு - 20.04.2017

Tuesday, January 31, 2017

TNTET 2017

டெட் தேர்வு தேதி உறுதி
<<<<<<<<>>>>>>>>>>>
சட்டசபையில் ஸ்டாலின்
கேள்விக்கு அமைச்சர்
பதில்
>>>>>>>>>><<<<<<<<<<
், ஆசிரியர்
தகுதி தேர்வு
நடத்தப்படும்,'' என,
பள்ளி கல்வித்துறை
அமைச்சர்
பாண்டியராஜன்
கூறினார்.
சட்டசபையில்,
எதிர்க்கட்சி துணைத்
தலைவர் ஸ்டாலின்,
நேற்று பேசும்போது,
''ஆசிரியர் தகுதி தேர்வு,
மூன்று ஆண்டுகளாக
நடத்தப் படவில்லை,''
என்றார்.
அதற்கு, பதில் அளித்த
அமைச்சர், ''தமிழகத்தில்,
ஏப்ரல், 29, 30ம்
தேதிகளில், 'டெட்'
தேர்வு நடத்தப்படும்,''
என்றார்

Tuesday, November 8, 2016

TNTET - ஆசிரியர் தகுதித்தேர்வு வழக்கின் தீர்ப்பு நாளை (09.11.2016) அறிவிப்பு.


ஆசிரியர் தகுதித்தேர்வில் இடஒதுக்கீடு மற்றும் வெயிடேஜ் முறையினை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழகத்தை சேர்ந்த ஆசிரியர்கள் வழக்கு தொடுத்திருந்தனர்.அது தொடர்பான விசாரணை வெகு நாட்களாக நடந்து முடிந்த நிலையில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் வழக்கின் தீர்ப்பானது கோர்ட் எண் 11-ல் வழக்கு எண் 1-ல் முதல் வழக்காக நாளை (09.11.2016) வெளியிடப்படுகிறது.
தீர்ப்பு எவ்வாறு இருக்கும்:
தமிழக ஆசிரியர்கள்அனைவரும் ஆவலுடன் எதிர் பார்க்கும் தீர்ப்பு நாளை வெளியிடப்படுகிறது.தீர்ப்பு எப்படி இருக்கும் என்பதை பொருத்தே பலரது வாழ்க்கையானது ஏற்றம் பெரும்.நல்ல தீர்ப்பு பாதிக்கப்பட்டவர்களுக்கு கிடைக்கும் என்ற நம்பிகையுடன் காத்திருப்போம் நாளை வரை...!

other links