tet books

time


follow me on fb

Wednesday, May 15, 2013

அரசு பள்ளிகளில் சேருங்கள் உங்கள் பிள்ளைகளை...



உங்கள் வரிபணம் .... உங்கள் உரிமை... அரசாங்க பள்ளிகளில் உங்கள் குழந்தைகளை சேர்ப்பது..

கல்வி வியாபாரமாக்கப்படுவதை நீங்கள் இன்று ஊக்குவித்தால் நாளை ஏழைகளுக்கு கூட கல்வி இலவசமாக கிடைக்காமல் போகலாம்...

வேலை மட்டும் அரசாங்கம் அளிக்க வேண்டும்... படிப்பை தனியாரிடம்தான் படிக்க வேண்டுமானால் இன்று மிக பெரிய வேலைவாய்ப்பினை அளித்து கொண்டிருக்கும்..

‘அரசு ஊழியர்கள் - ஆசிரியர்கள் ‘ என்பதிலிருந்து ஆசிரியர்கள் என்ற ஒரு பதவியை.... அரசாங்கம் அளிக்காது... அது நாளை உங்கள் குழந்தைகளைதான் வேலைவாய்ப்பில் பாதிக்கும் என்பதை மனதில் கொள்ளுங்கள்...

அரசாங்க பள்ளிகளில் படிப்பவர்கள் எல்லாம் முட்டாள்கள் அல்ல... தனியார் பள்ளிகளில் படிப்பவர்கள் எல்லாம் அதி புத்திசாளிகளும் அல்ல..

எலலா பள்ளிகளிலும் எல்லா வகை மாணவர்களும் இருக்கிறார்கள்... அவர்களை அவர்களின் தேவைக்கேற்ப முன்னேற வைப்பது ஆசிரியர்களின் தெய்வீக பணி...  


மாணவர்களின் தன்னிச்சையான முழுமையான வளர்ச்சிக்கு உத்திரவாதம் அளிப்பவை அரசாங்க பள்ளிகளே... உங்கள் பிள்ளைகளை படி... மனப்பாடம் செய் ... என்று வலியுறுத்துவதைவிட அவர்களின் ஆற்றல்களை சிறுவயது முதலே கண்டறிந்து மேம்படுத்துவதே சாலச்சிறந்த கற்பித்தலாக அமையும்...


0 தங்களின் கருத்து பதிவிற்கு இங்கே சொடுக்கவும்...:

Post a Comment

தங்களின் கருத்துக்கள் வரவேற்க படுகின்றன

other links